CHAT with ME

பிரன்ஹாம் கிறிஸ்துவுக்குள் ஒரு சிறந்த மனிதர் ******* @@@@@ free counters

Wednesday, May 21, 2008

கர்த்தரின் வருகையின் அடையாளமாக ஏழு முக்கிய தரிசனங்கள் seven visions of william branham






GOOGLE CARttp://digitalphotopix.com/wp-content/uploads/2014/05/GoogleDriverlessCar.jpg" imageanchor="1" >
clickhere
இந்தப் படங்கள் கர்த்தரின் வருகைக்கு முன்பாக நிகழும் ஏழு நிகழ்வுகளை முன்னறிவித்த பிரன்ஹாமின் தரிசனங்களின் நிறைவேறியவைகள்
1 இத்தாலியின் சர்வாதாகாரி முசோலினி எத்தியோப்பாமீது
படையெடுப்பதும்,அந்நாடு அவன் கைகளில் வீழ்வதும், தம்நாட்டு மக்களாலேயே
அவன் துப்பப்பட்டு வீழ்ச்சியடைவதும்
2. ஓர் ஆஸ்திரிய இளைஞன் ஜெர்மனியின் கொடுங்கோலனாக எழுச்சியுற்று 2ஆம்
உலகப்போருக்கு காரணமாவதும், அமெரிக்கா அப் போரில் இறங்குவதும்
முன்னறவிக்கப் பட்டு ஹிட்லர் மூலமாக நிறைவேறினது.
3. பாசிசம்,நாஜிசம்,கம்யூனிஷம் மூன்றும் தோன்றி கம்யூனிஷம் மட்டும்
நிலைநிற்பதும் அதினால் ரஷ்யா வல்லரசாவதை கவனிக்குமாறு எச்சரித்தது.
இவைகள் தற்சமையம் நிறைவேறி வரலாறாகியிருக்கிறது.

தற்சமயம்நிகழ்வில்உள்ளவைகள்  4.2ஆம்போருக்குப்பின்விஞ்ஞானம் குறிப்பிடும் படியாக வளர்ச்சியடைவதும் அதன்பயனாக ஓட்டுனரே தேவைப்படாத
திருப்புவிசைச்சக்கரம் இல்லாமலேயே இயங்கும் முட்டை வடிவக்கார்கள்clickhere
அமெரிக்காவில் தொலைஇயக்கியால் இயக்கப்பட்டு பவனி வருவதும். அதில்
பயனித்தவர்கள் CHECKERS போன்ற ஒரு விளையாட்டில் கவனம் கொண்டிருப்பதும்
போல் காணப்பட்டது. இது தற்சமயம்GPS-தொழில்நுட்பத்தினால்
5. பெண்கள் ஓட்டுரிமை பெறுவதும், நல்லொழுக்கம்
சீரழிவதும்,ஆடைக்குறைப்பினால் ஏறத்தாழ நிர்வாணமாக திரிவதையும் கண்டார்.
இனி நிறைவேற வேண்டியவைகள்

6. அமெரிக்க தேசத்தில் அழகான ஆனால் வஞ்சகமும்,கொடூரமுமுள்ள ஓர் பெண்
எழும்பி மிகுந்த அதிகாரமுள்ளவளாகி விவரிக்கவியலா கடின தன்மையோடு ஆதிக்கம்

செலுத்துவதைக் கண்டார். ஒரு வேளை அது ரோமன் கத்தோலிக்க சபை அமெரிக்க
தேசத்தில் செல்வாக்கு அடைவதைக் குறிக்ககூடும்.
7.கடைசியாக இன்னும் ஒரு முறை பார்க்கும் படி அச்சத்தம் கூறினது
தீர்க்கதரிசி திரும்பிபார்த்தபோது ஓர் பெரிய வெடிச்சத்தம் ஏற்பட்டு
அமெரிக்கா புகைக்காடாக மாறியிருந்தது.கண்ணுக்கெட்டிய தூரம் வரை
குழிகளும்,புகையும் குப்பைகளுமே இருந்ததுமேயன்றி மனிதர் யாரும் அங்குகாணப்பட வில்லை. தரிசனம் மறைந்தது.
 click here 1,2,3  

32 comments:

Unknown said...

84.நண்பனே,நான் மறுரூபமடைந்தது,அல்லது தரிசனம் கண்டது எனக்கு அவ்வளவு முக்கியம் வாய்ந்தது.நான் அதை ‘தரிசனம்’என்று கூறும் காரணம் என்னவெனில்,நான் ‘மறுரூபமடைதல்’ (translation) என்று அதைக் கூறுவேனானால்,அது யாரையாகிலும் புண்படுத்தும் என்று அஞ்சுகிறேன்.ஆனால் உண்மையில் அது மறுரூபமாகுதல் தான்.
219.அன்று காலை எனக்கு என்ன நேர்ந்ததோ எனக்குத் தெரியாது.நான் சரீரத்திலிருந்து கொண்டு தரிசனம் கண்டேணோ, அல்லது அந்த இடத்திற்கு நான் எடுத்துக்கொள்ளப்பட்டேனோ என்று எனக்குத் தெரியாது.என்னால் சொல்ல முடியாது.ஒன்று மாத்திரம் எனக்குத் தெரியும்.எனக்கு எப்பொழுதும் மரணம் என்றால் பயம்.இயேசு என்னைக் கொண்டு செல்ல மாட்டார் என்பதனால் நான் பயப்படவில்லை. உங்களை நான் சந்திக்கும் போது ஒரு மூடுபனியைப் போல் ஆகாயத்தில் பறக்க நேரிடும் என்று நான் நினைத்ததால் தான்.ஆனால் இப்பொழுது நான் கண்டுகொண்டேன். அந்த ஜனங்களை நான் கணெடபோது,அவர்கள் உருவமுள்ள ஜனங்களாக தத்ரூபமாகக் காணப்பட்டனர்.
செய்தி:- புத்திரசுவிகாரம்-பாகம்-2 மே 18,1960.
bro.jeevajayam . +919884595250.

Unknown said...

381.சென்ற இரவு நான் உங்களிடம் கூறினவாறு…நான் உண்மையை உங்களிடம் கூறினேன் என்பதை கர்த்தர் அறிவார்.பவுல், “நான் பொய்யுரைக்கவில்லை” என்று சொன்னது போல் நானும் உங்களிடம் சொல்கிறேன்.நான் உங்கள் முன்பாக நிற்பது எவ்வளவு உண்மையோ அதே போல நான் கண்ட அத்தரிசனத்தில்,மரித்து அங்கு சென்றவர்களை நான் கண்டேன்,அவர்களைத் தொடவும் செய்தேன் என்பதும் உண்மையாகும்.சகோதரனே,சகோதரியே,அதை இழந்து போகவேண்டாம்.நீங்கள் அதைச் செய்யவேண்டாம்.இதைக் குறித்து இதை,அதை மற்றும் அநேக கதைகளை நீங்கள் கேட்டிருக்கலாம்.ஆனால் நான் சொல்வதைக் கேளுங்கள்.அது உண்மையென்பது எனக்குத் தெரியும்.பாருங்கள் அதை இன்னும் தெளிவாக எடுத்துரைக்க என்னால் முடியவில்லை.அதை நழுவவிட வேண்டாம்.அவை யாவும் உங்களுக்கே.
செய்தி:- ஆறாம் முத்திரை. மார்ச்சு 21,1963

Unknown said...

220.தங்களை கிறிஸ்துவின் ஊழியக்காரர் என்று உரிமைக் கொண்டாடுகின்ற அநேகர்,இந்த நாளுக்குரிய வார்த்தையானது முற்றிலுமாக அடையாளம் காட்டப்பட்டு,இந்த நேரத்தின் செய்தி இதுதான் என்று நிரூபிக்கப்பட்டாலும்,தங்களின் புகழுக்கா அதை ஸதாபனத்திற்கு விற்று விடுகின்றனர்.யூதாஸ் இயேசுவை பரிசேயர் சதுசேயருக்கு காட்டிக் கொடுத்தது போல இவர்களும் செய்கின்றனர்.அந்த ஆவியானது ஒருபோதும் மரிப்பதில்லை.அது விசுவாசிகள்,பவனை விசுவாசிகள்,அவிசுவாசிகள் மத்தியில் உள்ளது.பாருங்கள்.அதே ஆவி சரியாக இறங்கி வந்து இயேசுவை முப்பது வெள்ளிக்காசுக்கு விற்றுப் போட்டது;அநேக மனிதர்கள் ஜீவனத்திற்காகவும், சாப்பாட்டுச் சீட்டுக்காகவும் வாரத்திற்கு உபரியாக கிடைக்கும் நூறு டாலர் சம்பளத்திற்காகவும் இயேசுவை விற்று விடுகின்றனர்.தங்களுக்கு முழு வார்த்தையையும், ஜீவனையும் கொண்டு வந்து,தங்கள் மத்தியிலே நின்று கொண்டிருக்கிற தேவனை அவர்கள் மறுதலிக்கின்றனர்.

செய்தி:- மூவகை விசுவாசிகள். நவம்பர் 24,1963.

Unknown said...

199.அநேக சமயங்களில் நான் வீடுகளுக்கு செல்வதுண்டு,அங்கே பெண்கள் நின்று கொண்டிருப்பார்கள்.நான் ஒரு வீட்டை அடைந்து கதவை தட்டும் போது,ஒரு சகோதரி வந்து, “உள்ளே வாருங்கள்,சகோ.பிரன்ஹாம்” என்று அழைத்தால்,அவளுடைய கணவர் அங்கு இல்லாமல் போனால், அது வியாதிப்பட்ட விஷயமாகவும், என்னோடு கூட ஒருவர் இருந்தாலொழிய நான் உள்ளே போக மாட்டேன்.அவள் என்னை மருத்துவமனைக்கு அல்லது அறைக்கு அழைத்து “சகோ.பிரன்ஹாமே,இங்கே வாருங்கள்.நான் சகோதரி இன்னார்,இன்னார் தான் இன்னின்ன இடத்திலிருந்து வருகிறேன்.நான் ஓட்டலில் தங்கியிருக்கிறேன்.என் தாயாரை அழைத்து வந்திருக்கிறேன்;அவர்கள் வியாதியாயிருக் கிறார்கள்” என்று சொன்னால்,என் மனைவியை நான் கூட்டிக் கொண்டு செல்வேன்.இல்லையென்றால்,ஏதாவதொரு சகோதரனை கூடக் கொண்டு செல்வேன்.
200.பாருங்கள்,நான் எண்ணவில்லை….அங்கு நான் செல்வதில் தவறொன்றுமில்லை என்பது என் கருத்து.ஆனால் நான் அங்கு செல்வதை யாராகிலும் கண்டால்? பாருங்கள்? முதலாவதாக என்ன தெரியுமா?,அவர்கள்,”அந்த பெண் இருந்த அறைக்குள் சென்றார்,அவர் பெண்களின் பின்னால் நடக்கிறார்” என்று மோசமாக பேசுவார்கள். அது…பாருங்கள், அந்த காரியத்தை செய்யக்கூடாது. பாருங்கள்? அப்படிபட்ட ஒன்றை நீங்கள் செய்யக்கூடாது.ஏனெனில் யாராவது ஒருவருடைய வழிகளில் நீங்கள் இடறலைப் போடுகிறவர்களாயிருப்பீர்கள்.பாருங்கள்? அவ்விதம் செல்வதனால் நான் தவறொன்றும் செய்வதில்லை என்று நினைக்கிறேன்.நான் உள்ளே போகும் போது தேவனை நம்பியே செல்கிறேன்.அந்த காரியம் என்னவாயிருந்தாலும்,நான் தேவனையே நம்பி எல்லாவற்றையும் செய்கிறேன்.இருப்பினும்,பாருங்கள்…நான் கர்த்தரை போதுமான அளவுக்கு நேசிப்பதனால் அதை செய்யமாட்டேன்.
218…..தேவனுடைய வார்த்தையின் ஆவியும் வல்லமையும் இந்தக் கடைசி நாட்களில்,அவர்களுடைய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அம்பலப்படுத்துகிறது (அவ்வளவுதான்), அவர்கள் இவைகளின் மூலம் ஜனங்களை குருடாக்கி வந்தனர்.எனவே என் இளம் சகோதரரே,இந்த சபைகளிலிருந்து இங்கு வந்துள்ளாரே,தேவனுடைய வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள்.அசையாதீர்கள்.உங்களால் அதை நிறைவேற்ற முடியாமல் போனால்,வேறு யாருடைய வழியிலும் குறுக்கே நிற்காதீர்கள்.அங்கு நின்று கொண்டு,கதவைத் தட்டிக் கொண்டு, அதை சுட்டிக் காட்டுங்கள்.அங்கேயே நிலைத்திலுங்கள். மதவெறியை தொடங்கி விடாதீர்கள்.ஏனெனில் அது உங்களை காட்டிக் கொடுத்து விடும்.நீங்கள் உண்மையும் பரிசுத்தமுள்ளவர் களாய் அந்த வார்த்தையில் நிலைத்திருப்பீர்களானால்,தேவன் உங்களை உறுதிப்படுத்துவார்.அது உண்மை.
219.அவருடைய ஊழியம் அவர்களுடைய உபதேசங்களையும், கொள்கைகளையும் அம்பலப்படுத்தினது. எனவே அவர்கள் தங்களுக்கு கிடைக்கப் பெற்ற ஒவ்வொரு தருணத்தையும் பயன்படுத்தி அவரை ஒழிக்கப் பார்த்தார்கள்.அவரை ஒழிக்கக் கூடிய ஒவ்வொரு உபாயத்தையும் அவர்கள் கையாண்டார்கள்……..
செய்தி:- இயேசுவின் பட்சம் சேர்ந்திருத்தல். ஜூன் 1,1962.

Unknown said...

1 தெச.4:13-17
129. இந்த மகத்தான நிகழ்ச்சியை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன்.காணத் தவறவேண்டாம். கர்த்தர் பிரசன்னமாகு முன்பு,மூன்று காரியங்கள் நிகழ வேண்டுமென்று 13 முதல் 16 வசனங்கள் உரைக்கின்றன. அவை ஆரவாரம், சத்தம்,எக்காளம்,என்பனவாம்.அது உண்மையா என்பதை நாம் அறிந்து கொள்ள மறுபடியும் 16ம் வசனத்தை படியுங்கள்.அவர் இறங்கி வரும் போது இவை மூன்றையும் அவரே செய்கிறார்.
204. ஒருக்கால் இச்சம்பவம் ஏற்கனவே நிகழ்ந்து விட்டதா? மணவாட்டி ஏற்கனவே அழைக்கப்பட்டு முடிந்து விட்டதா? இப்பொழுது இதுதான் சம்பவித்துக் கொண்டு வருகின்றதா? மணவாட்டி கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக வார்ப்பிக்கபடவேண்டும். கிறிஸ்துதான் வார்த்தை, அதனுடன் நாம் ஒன்றையும் கூட்டமுடியாது.உதரணமாக, ஒரு கை மனித கை நாயின் பாதமாகவும் உள்ள எந்த ஒரு பெண்ணுமாயும் நாம் காண்பதில்லை.அது தேவனுடைய வார்த்தையாகவே இருக்க வேண்டும்.அவரே வார்த்தை.மனைவி கணவனின் ஒரு பாகமாக இருக்கிறாள். ஏனெனில் அவள் கணவனிலிருந்து எடுக்கட்டவள். அவ்வாறே மணவாட்டியும் மணவாளனின்று எடுக்கப்பட்டவள். ஆகவே மணவாட்டியும் மணவாளனின் ஒரு பாகமாக இருக்கிறாள்.ஏவாள் ஆதாமின் ஒரு பாகம். அவள் அவன் விலாவினின்று வெளியே எடுக்கப்பட்டவள்: அது போன்று மணவாட்டியும் கிறிஸ்துவின் ஒரு பாகமாக இருக்கிறாள்.அவள் ஸ்தாபனத்திலிருந்து எடுக்கப்பட வில்லை.அவள் இக்காலத்துக்குறிய தேவனுடைய வார்த்தையினின்று எடுக்கப்பட்டவள்.

செய்தி:-ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல்.04-12-1965.

Unknown said...

484.அவருடைய பிரசன்னம், தனிப்பட்ட நபரில்,ஒரு தனிப்பட்ட விதத்தில் தம்மைத்தாமே உறுதிப்படுத்தி தம்மைத்தாமே வெளிப்படுத்தி, இந்நாளுக்கென வாக்குத்தத்தம் செய்யப்பட்ட அந்த ஜீவிக்கின்ற வார்த்தையானது, தம்மைத்தாமே உன் மூலமாக வெளிப்படுத்துகின்றது, தேவனுடைய மகத்தான வெளிப்பாட்டின் உறுதிப்படுத்துதல்.பாருங்கள், தனிப்பட்ட ஒரு நபருக்குள்,ஒரு குழுவில் அல்ல! ஒரு தனிப்பட்ட நபர்; ஒரு குழுவில் அல்ல! ஒரு தனிப்பட்ட நபரில் அடையாளங் கண்டு கொள்ளுதல் இருக்கின்றது.உங்களுக்கு புரிகின்றதா?.......................
485.”ஒருவனை ஏற்றுக்கொள்ளுவேன்,மற்றவனைப் பிரித்து விடுவேன்.” அது உண்மை,”வயலில் இரண்டு பேர் இருப்பார்கள்,ஒருவனை ஏற்றுக்கொள்ளுவேன், மற்றவனைக் கைவிடுவேன்.”
486.அது ஒரு குழுவல்ல.அது தேவனுடைய பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு கர்ப்பந்தரித்த தேவனுடைய பிள்ளையின் மூலமாய் தம்மை தனிப்பட்ட விதத்தில் வெளிப்படுத்துதல்.அந்த தேவனுடைய பிள்ளை தன்னை தேவனுக்கு முற்றிலும் சமர்ப்பித்தவனாய் வேறொன்றையும் குறித்து கவலை கொள்ளாதிருப்பான்.பரிசுத்த ஆவியானது அதனுடைய ஜீவியத்தை செய்து,அவன் மூலமாக நாடித் துடிப்பை செய்து வார்த்தையின் தனிப்பட்ட உறுதிப்படுத்துதலை காண்பித்து,தம்மைத்தாமே, ஜனங்களுக்கும்,உலகிற்கும் வெளிப்படுத்துகிற வராயிறுக்கிறார்.
487.இப்படிபட்ட ஒன்றைக் காணமல் ஜனங்கள் எப்படி குருடாயிருக்க முடியும்?..... .............
490.”என்னுடைய சபை.....” என்று கூறாதீர்கள். இப்பொழுது”என் சபைக்கும்” இதற்கும் எவ்வித தொடர்புமில்லை.
491.அது தனிப்பட்ட நபரைக் குறித்த ஒன்றாகும்.ஒரு நபர்! பாதாளம் முழுவதுமே இந்த போதனைக்கு விரோதமாக உள்ளது.பாதாளம் முழுவதுமே இந்த சத்தியத்திற்கு எதிராக உள்ளது.ஆனால் இது சத்தியம்.

செய்தி: கிறிஸ்து தேவனுடைய பரம ரகசியத்தின் வெளிப்படுதலாயிருக்கிறார்.28-07-1963.

Unknown said...

23. இப்பொழுது நம்மால் அநேக காரியங்களைச் செய்ய முடிகிறது. நம்மால் இராப்போஜனம் எடுக்க முடிகிறது. நாம் ஞானஸ்நானம் பண்ணப்பட முடியும். நம்மால்-நம்மால் சபைக்கு வரமுடியும். நம்முடைய பெயர்களைப் புத்தகங்களில் பதிவு செய்திருக்க முடியும் அல்லது நம்மால் இருக்க முடிந்தளவு மரியாதையாயும்,பயபக்தியாயும் இருக்க முடிந்தும்,அதே சமயத்தில் இழக்கப்படமுடியும். அது ஒரு பயபக்திக்குரிய எச்சரிப்பாயிருக்கிறது. ஆவியானது பொழியப்படும்போது நம்மால்... அப்படியே களிகூரமுடியும். ஒரு கூட்டத்தில் வார்த்தையானது பிரசங்கிக்கப்படும் போது,நம்முடைய ஆத்துமாக்கள் வார்த்தையினால் களிகூர்ந்தும்,நாம் இழக்கப்படமுடியும்.
25. நாம் ஞாயிற்றுக்கிழமையில் எந்த ஒரு காரியத்தையும் நம்முடைய கரங்களைக் கொண்டு செய்யாத அளவிற்க்கு மிகவும் பயபக்தியுள்ளவர்களாயிருக்கலாம்.நாம் நம்முடைய ஆடைகளில் ஞாயிற்றுக்கிழமையில் ஒரு தையலும்கூட போடாதவர்களாயிருக் கலாம் ஞாயிற்றுக் கிழமையில் ஆகாரத்தை வாங்குவது நேர்மையாய் காணப்படவில்லையென்ற உணர்வையும் கூட கொண்டிருக்கலாம். நாம் மிகுந்த பக்தியுள்ளவர்களாயும், மிகுந்த கடமையுணர்வை பேணுகிறவர்களாயும் இருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் நாம் தேவனுடைய ஆவியில் சரியாக மீண்டும் பிறக்கவில்லையென்றால்,நாம் வீணாய் ஆராதித்துக் கொண்டிருக்கிறோம்.

செய்தி:- கொரிந்தியர்,திருத்துதலைக் கொண்ட புத்தகம்,14-04-1957

Unknown said...

400-வது பக்கம்
இக் காலத்துத் தூதன் புகழ் பெற்றவராயிரா விட்டாலும்,தேவன் அவர் சரியென நிரூபிப்பார்.யோவான் ஸ்நானனை இயேசுவும்,இயேசுவைப் பரிசுத்த ஆவியும் உறுதிப்படுத்தியது போன்று,வேறெங்கும் காணக்கூடாத அற்புதங்களையும், அடையாளங்களையும் பரிசுத்த ஆவியானவர் இத்தூதனுடைய ஜீவியத்தின் மூலம் நிகழ்த்தி,அவரை உறுதிப்படுத்துவார்.இயேசு இவ்வுலகத்தில் வாழ்ந்த போது,யோவானைக் குறித்து சாட்சி கொடுத்தது போன்று,தம்முடைய இரண்டாம் வருகையில் இத்தூதனைக் குறித்து சாட்சிக் கொடுப்பார்.இத்தூதனும் யோவானைப் போன்று,இயேசுவின் வருகையை அறிவிப்பார்.இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையே இந்தத் தூதன் அவருடைய வருகைக்கு முன்னோடியவன் என்பதை நிரூபிக்கும்.இயேசு மறுபடியும் பிரசன்னமாகும்போது, புறஜாதிகளின் காலம் முடிவு பெறும்.அப்பொழுது அவரைப் புறக்கணித்தவர்கள் இரட்சிக்கப்பட முடியாமல் காலதாமதமாகியிருக்கும்.
செய்தி:-ஏழு சபைக்காலங்களின் வியாக்கியானம்-04-12-1965

Unknown said...

200.தேவனே,நான் மிகவும் மகிழ்ச்சிக் கொள்கிறேன்.என்ன செய்வதென்றே எனக்குத் தோன்றவில்லை.இப்பொழுது இதை நானாக கூறுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.நானும் கூட இங்கே உங்கள் மத்தியில் இருக்கிறேன்.பாரூங்கள்? நான், அது நான்.எனக்கு ஒரு குடும்பம் உண்டு.எனக்கு சகோதரரும், சகோதரிகளும் உண்டு? அவர்களை நான் நேசிக்கிறேன். பரலோகத்தின் தேவன் தாமே கிருபையாய் இறங்கி வந்து தரிசனங்களின் மூலமாக அவரையும் அவருடைய சத்தியத்தையும் வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார்.முப்பது வருட காலமாக இவை யாவும் உண்மையென்று நிரூபிக்கப்பட்டுள்ளது.நாம் இங்குள்ளோம். நாம்...ஆம்,நாம் கடைசி காலத்தில் வந்துவிட்டோம். அவ்வளவுதான். இது உண்மையென்று விஞ்ஞான ஆராய்ச்சி நிரூபித்துள்ளது. தேவனுடைய வார்த்தையும் அது உண்மையென்று நிரூபித்துள்ளது. அப்படியானால் நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம்.இந்த வெளிப்பாடு தேவனிடமிருந்து வருகிறது.இது சத்தியம்.
201.நீங்கள் ஏதாவதொன்றைக் கண்டுபிடித்தீர்களா? (சபையோர்”ஆமென்” என்கின்றனர்)நீங்கள் அதை கண்டீர்களா என்று நான் சற்று அதிசயித்தேன். பாரூங்கள்?ஆம்,ஐயா. அப்படியானால், நான் ஞாயிறன்று அதைக் கூற வேண்டியதில்லை. கவனியுங்கள். கவனியுங்கள். அதிசயம்!இப்பொழுது, இப்பொழுது இப்பொழுது கவனியுங்கள்.
செய்தி:- ஏழு முத்திரைகளின் வெளிப்பாடு-ஐந்தாம் முத்திரை.

Unknown said...

மேசியா தோன்றும் போது,அவர் நேராக ஆலயத்துக்கு வந்து 'காய்பாவே நான் வந்துவிட்டேன்' என்று சொல்வார் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும். அல்லது ஒருகோடி தேவதூதர்கள் அவரை வணங்கிய வண்ணம் அவர் தோன்றுவார் என்றும்,தேவன்,'பூமியிலுள்ள ஜனங்களே, நீங்கள் ஒரு மகத்தான சபை,நீங்கள் என் ஜனம். நான் யந்திரக் கைப்பிடியைச் சுழற்றி வானத்தின் தாழ்வாரங்களைக் கீழே இறக்கப் போகிறேன்.இன்று காலை மேசியாவை உங்களுக்கு அனுப்புவேன்.அவர் உங்கள் முற்றத்தில் நேராக இறங்குவார்' என்று சொல்வார். அப்பொழுது அங்கு சூழ்ந்திருக்கும் ஜனங்கள்,'டாக்டர் பட்டம் பெற்றவர்களே, நீங்கள் முன்னால் நின்று இயேசுவுக்கு முதலில் வரவேற்பு கொடுங்கள்' என்று சொல்வார்கள் என்றெல்லாம் அவர்கள் நினைத்திருப்பார்கள்.
ஒருக்கால் இன்றைக்கும் அவர்கள் அவ்வாறு நினைக்க வழியுண்டு.நான் கூறுவது கொடூரமாகக் காணப்படலாம். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தைக் கூற நான் முயல்கிறேன்.
'நாங்கள் நினைத்தவண்ணமே அது நடக்கவேண்டும்;நாங்கள் நினைத்ததற்கு மாறாக அது நடந்தால்,அது அந்திகிறிஸ்துவின் கிரியையாகும்' என்று அவர்கள் எண்ணுகின்றனர்.பாருங்கள்? மேலும் அவருடைய இரண்டாம் வருகையில் ஒரு கோடி தேவதூதர்கள் மேளம் அடித்துக் கொண்டு வணங்க,மரித்தவரும் இவர்களும் பரிசுத்தவான்களும் (Saints) புத்திமான்களும் (Sages) மரித்த இடமாகிய இந்த புனித ஸ்தலத்தில் சுற்றி அங்குமிங்குமாக உலாவுவார்கள் என்று கற்பனை செய்கின்றனர். (மத்.23:29-32)

அவருடைய தோற்றம் அவர்கள் கொண்டிருந்த கருத்துக்களை அதிகமாக பாதித்தது.பாருங்கள்? அவர்களுடைய கல்வி அறிவு அதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.வேதத்தைப்பற்றி அவர்கள் கொண்டிருந்த கருத்துக்கள்,அவர் எவ்விதம் தோன்றுவா ரென்பதை அறிந்து கொள்ளவே முடியவில்லை. ஆயினும் அவர் கர்த்தர் உரைத்த விதமாகவே தோன்றினார். ஓ என்னே!.
அதை நினைக்கும்போதே எனக்கு நடுக்கம் உண்டாகிறது.அதே சம்பவம் இப்பொழுது மறுபடியும் நிகழ்வதை காணும்போது.... தேவன் ஒரு போதும் மாறாதவராயிருக்கிறார்.
செய்தி:- தேவன் எளிமையில் மறைந்திருந்து, அதன்பின்அவ்விதமே தம்மை வெளிப்படுத்துதல். பக்கம்:69,70 பாரா:268,269,270,273.

Unknown said...

அவள்,''மேசியா வருகிறாரென்று அறிவேன். அவர் வரும் போது இவைகளைச் செய்வார்" என்றாள். அப்பொழுது அவர், "உன்னுடனே பேசுகிற நானே அவர்" என்றார். பவுலிடமும் மற்றவர்களிடமும் அவர் கூறினார். கவனியுங்கள்.இப்பொழுது சபை முதன்மையான உயர்ந்த ஸ்தானத்தை கொண்டிருக்கிறது.
தேவனுடைய மகத்தான இரகசியம் எப்பொழுதுமே உலக ஞானத்தை குருடாக்குகினது.அவர்களால் அதை புரிந்துக்கொள்ள முடியாது.அவர்கள் அதை புரிந்து கொள்வதில்லை.அதை-அதாவது எப்படி தேவனும் கிறிஸ்துவும் ஒருவரே என்பதை-முன்குறிக்கப்பட்டவர் மாத்திரமேயன்றி வேறு யாறும் புரிந்துக் கொள்வதில்லை. அவர்கள் ஒவ்வொரு முறையும் அவரை மூன்றாக ஆக்கிவிடுகின்றனர்.பாருங்கள்? அவர்கள் அப்படி செய்வது நிச்சயம்.
கவனியுங்கள்,இரண்டாவதாக,கிறிஸ்து மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருந்துக் கொண்டு வெளிப்படுதல்.அந்த மகத்தான வெளிப்படுத்தப்பட்ட தேவன் கிறிஸ்துவுக்குள்,இப்பொழுது கிறிஸ்து உங்களில் வெளிபடுத்தப்படுகிறார்.
நாம் துரிதமாக கடந்து செல்வோம்,பாருங்கள்! ஒரு காலத்தில் தேவனுடைய மகத்தான இரகசியம், தம்முடைய சிந்தையில் இருந்த மகத்தான இரகசியங்கள்,இப்பொழுது விசுவாசியின் இருதயங்களில் வைக்கப்பட்டிருக்கின்றது, அதாவது,கிறிஸ்துவினுடைய சரீரத்தில் ஒரு காலத்தில் தேவனுடைய மகத்தான இரகசியமாக உலகத் தோற்றத்திற்க்கு முன்னர் தம்முடைய சிந்தையில் இருந்த ஒன்று,இப்பொழுது வெளிப்படுத்தப்படுகின்றது. அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள் ! பாருங்கள்? ஓ, என்னே! ஓ நான்....

ஓ, அதை நாம் புரிந்துக்கொள்ளவில்லையென்று நிச்சயமாக எனக்குத் தெரியும். நல்லது,எவ்விதமாக அதை நான் காண வேண்டுமோ அவ்விதமாக என்னால்-என்னால் அதை காண முடியவில்லை. ஆகவே? ஆகவே உங்களால் முடியவில்லை என்று நிச்சயமாக தெரியும்.பாருங்கள்?

ஆனால் தேவனுடைய மகத்தான இரகசியம், ஒரு இரகசியமாக நித்திய தேவன் எதை வைத்திருந்தாரோ, இப்பொழுது அது இயேசு கிறிஸ்துவுக்குள் வெளியரங்கமாக்கப்பட்டு பிறகு சரியாக தம்முடைய சபைக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது.ஒரு காலத்தில் தேவனுடைய சிந்தையிலிருந்தவை,இப்பொழுது கிறிஸ்துவின் சரீரத்திலிருக்கிறது. இயேசு தமது மணவாட்டியாகிய சபையை நோக்கி காதல் செய்து, இரகசியங்களை குசுகுசு வென்று அவளிடம் மெல்லப் பேசிக்கொண்டிருக்கிறார்.

நீங்கள் விவாகம் செய்ய வேண்டுமென்று தீர்மானித்துள்ள பெண்ணிடம் உங்கள் இரகசியங்களை எப்படி சொல்வீர்கள்? அவளை நீங்கள் அதிகமாக நேசிக்கிறீர்கள். அவளை உங்கள் பக்கத்தில் உட்காரவைத்து, அவளை நீங்கள் சிநேகிப்பதாக கூறிவிட்டு, அவளிடம் உங்கள் அந்தரங்க இரகசியங்கள் குசுகுசு வென்று கூறுவீர்கள் அல்லவா? அது எப்படியிருக்குமென்று உங்களுக்குத் தெரியும்.

அதைத்தான் கிறிஸ்து சபைக்குச் செய்துக்கொண்டிருக்கிறார். பாருங்கள்? அவள் இரகசியங்களை, இரகசியங்களை மாத்திரம் அறியும்படி செய்கிறார்-எல்லோரிடமும் சல்லாபம் செய்யும் பெண்களிடமல்ல - அவருடைய மனைவியிடம். பாருங்கள்? அது சரி. இப்பொழுது கவனியுங்கள்.இல்லை, தம்முடைய கிருபையினால்,தம்முடைய இரகசியத்தைக் குறித்த வெளிப்பாட்டை அவர்களுக்கு தெரியப்படுத்துக்கின்றார்! எப்படி தேவனுடைய கிருபை! ஜனங்களே, எனக்குத் தெரியும்.... இது மாத்திரம் தனிப்பட்ட விதத்தில் கூறப்படுவதாக நீங்கள் எண்ண வேண்டாம். தேவன் தமது இரகசியத்தை முழு சபையிடம் பகிர்ந்து கொள்கிறார்-அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களானால். பாருங்கள், அது எனக்கும் உங்களுக்கும் மாத்திரம் என்றல்ல. அவர்-அவர் உள்ளே நுழைய முயன்று கொண்டிருக்கும் சபை முழுவதற்குமே இது உரியது.
"அவர்கள் ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்?" என்று நீங்கள் கேட்கலாம்.அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.அவர், இந்த காரியங்களை மறுபடியும் கூறினர். "ஆகவே எப்படி அவர்களால்?" ஏனெனில் அவர்களால் அதை காணமுடியாது என்று ஏசாயா கூறினான். பாருங்கள்?ஆகவே அவர் எப்பொழுதுமே கூறியுள்ளார்.
செய்தி: கிறிஸ்து தேவனுடைய பரமரகசியத்தின் வெளிப்படுதலாயிருக்கிறார்.
பக்கம்:113,114,115 பாரா:392,393,394,395,396,397,398,399.

Unknown said...

150. நல்லது,மாய்மாலக்காரனே1உனக்கு என்ன நேர்ந்தது? வஞ்சிக்கப்பட்ட பிள்ளையே,நீ சுவிசேஷத்தை விட்டு வெகுதூரம் அகன்று சென்று விட்டாய்.அது மிகவும் பரிதாபம்.நீ சேறு நிறைந்த பாதைக்கு,எரிந்து கொண்டிருக்கும் குவியலுக்கு வழி திருப்பப்பட்டிருக்கிறாய்.அவர் என்ன கூறியுள்ளார் என்பதை உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இயேசு கிறிஸ்து இப்பொழுது மாம்சத்தில் தோன்றவில்லை என்று அறிக்கை பண்ணும் ஒவ்வொரு ஆவியும் தவறான ஆவியாகும்.இயேசு கிறிஸ்து நேற்றும்,இன்றும்,என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேதம் கூறுகின்றது.அவர் அன்று என்ன சொன்னாரோ,அப்படியே இன்றும் இருக்கிறார்.அவர் என்றும் அவ்வாறே இருக்கிறார். கவனியுங்கள் .
செய்தி:- புத்திரசுவிகாரம்-பாகம்-3

Unknown said...

326. நான் கண்டதையும் எனக்கு அறிவிக்கப் பட்டதையும் மாத்திரமே நான் உரைக்கிறேன்.நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். செய்யப் போகின்றது யார்...என்ன நடக்குமென்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்றை நானறிவேன்-அதாவது அந்த ஏழு இடிகளும் பரலோகம் அமைதியான காரணத்தின் இரகசியத்தை தங்களுக்குள் வைத்துள்ளன. எல்லோருக்கும் புரிந்துவிட்டதா?(சபையோர் “ஆமென்” என்று கூறுகின்றனர்)அந்த மகத்தான நபர் தோன்ற நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோமே, அவர் தோன்றும் நேரம் இப்பொழுதாக இருக்கலாம்.
327. ஜனங்களை தேவனுடைய வார்த்தைக்குத் திருப்ப முயன்ற என்னுடைய ஊழியம் ஒருக்கால் அதற்கு அஸ்திபாரமாக அமைந்திருக்கும்.அப்படியானால்,நான் உங்களை விட்டு ஒரேயடியாகச் செல்ல நேரிடும். ஒரே சமயத்தில் நாங்கள் இருவர் இருக்க முடியாது. பாருங்கள்? அப்படி இருக்க நேர்ந்தால்,அவர் பெருக வேண்டும்,நான் சிறுக வேண்டும். எனக்குத் தெரியாது.
செய்தி:-ஏழாவது முத்திரை.

Unknown said...

41. ஆகவே அந்த முத்திரைகள் உடைக்கப்பட்டு,தேவ ரகசியம் வெளிப்படுகையில்,அந்த தூதன்,அந்த செய்தியாளன்,கிறிஸ்து கீழே இறங்கி வந்து தம்முடைய பாதத்தை பூமியின் மேலும் சமுத்திரத்தின் மேலும் வைக்கின்றார்.அவருடைய சிரசின் மேல் வானவில் இருந்தது. பலமுள்ள தூதன் பூமிக்கு இறங்கும் இந்த வருகையின் நேரத்தில் இந்த ஏழாம் தூதன் பூமியில் ஏற்கனவே இருக்கிறான் என்பது நினைவிருக்கட்டும்.
42. யோவான் செய்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, அதே சமயத்தில் மேசியா வந்ததற்கு இது ஒத்திருக்கிறது.இயேசுவை அறிமுகப்படுத்துவதற்காக தான் குறிக்கப்பட்டவன் என்பதை யோவான் அறிந்திருந்தபடியால்,தான் அவரைக் காண்பான் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்.
செய்தி:- ஏழு சபையின் காலங்களுக்கும் ஏழு முத்திரைகளுக்கும் இடையேயுள்ள பிளவு.

Unknown said...

இக்காலத்திலும் கர்த்தர் மனிதரின் இருதயங்களிலுள்ள ரகசியங்களை வெளிப்படுத்துகிறார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? வார்த்தையேயன்றி, இருதயத்திலுள்ள ரகசியங்களை வேறு யார் வெளிப்படுத்தக்கூடும்? எபி.4:12. வார்த்தை வல்லமையுள்ளதா யிருப்பதால்,வார்த்தையாகிய இயேசுவில் இருந்த அதே ஆவி இக்கடைசிகாலங்களில் சபையில் காணப்பட்டு,மக்களை நியாயத்தீர்ப்பினின்று விடுவிக்க கடைசி அடையாளமாகக் கொடுக்கப்பட்டி ருக்கிறது. மக்களின் இருதயங்களிலுள்ள எண்ணங்களை அறிவதே இக்கடைசிகாலத்தின் அடையாளம். இவ்வடையாளத்தைக் கண்டும் விசுவாசமற்று, வார்த்தையாகிய இயேசுவைப் புறக்கணிக்கிறவர்கள், இப்பொழுதே நியாயத் தீர்ப்புக்குட்படு கின்றனர்.எபி.6:6.
செய்தி:- ஏழு சபைக்காலங்களின் வியாக்கியானம்

Unknown said...

120. நாம் நினைக்கும் வண்ணம் பகட்டான காரியங்களில் அல்ல, எளிமையான காரியங்களில் தேவன் தத்ரூபமாக காணப்படுகிறார். எனவே,தேவன் தம்மை வெளிப்படுத்தி,பின்பு மறைந்து கொள்வதில் பிரியம் கொள்கிறார். அதேவிதமாக தம்மை மறைத்துக்கொண்டு சாதாரணமாகமாக சிறு காரியங்களில் தம்மை வெளிப்படுத்துகிறார். அது மனிதனின் தலைக்குமேல் சென்று விடுகிறது. ….
122. ஆகவே,எளியவர்கள் கண்டுகொள்ளத்தக்கதாக தேவன் தம் கிரியைகள் எல்லாவற்றையும் எளியவிதத்தில் அமைத்திருக் கின்றார். சாதாரணமானவர்கள் தம்மை அறிந்து கொள்ள வேண்டுமென்று கருதி, தேவனும் எளியவர்களிடத்தில் எளியவராகி விடுகிறார். ஏசாயா 35-ம் அதிகாரத்தில்,”பேதையராயிருந்தாலும் திசைக்கெட்டுப்போவதில்லை” என்று எழுதப்பட்டுள்ளது. அது அவ்வளவு எளிமையானது.
123. தேவன் மகத்தானவர் என்று நாம் அறிந்துள்ளோம். ஆதலால் அவருடைய காரியங்களை ஏதோ ஒரு மகத்தான காரியமாக இருக்கும் என்று நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதன் காரணமாக சாதாரண, எளிமையான காரியங்களை நாம் இழந்து விடுகிறோம். எளிமையைக் கண்டு நாம் இடறிப் போகிறோம்.அவ்வாறேதான் நாம் தேவனை காணமுடியாமல் தவறவிட்டுவிடுகிறோம். அதாவது எளிமையைக் கண்டு இடறி விழுவதால்தான்.தேவன் மிகவும் எளிமையாய் இருப்பதன் காரணமாக இக்காலத்திலும்,எல்லா காலங்களிலுமுள்ள ஞானிகள் அவரை இலட்சக்கணக்கான மைல்கள் இழந்து போகின்றனர்.ஏனெனில் தேவனைவிட மகத்தானவர் யாருமில்லை என்பதனைத் தங்கள் அறிவுக் கூர்மையால் அவர்கள் அறிந்துள்ளனர். ஆனால் அவருடைய வெளிப்படுதலில்,அவர் அதை மிக எளிமையாக்குவதால்,அவர்கள் இடறி விழுந்து அவரைக் காணத் தவறினர்.
124. இப்பொழுது நீங்கள் அதனை ஆராய்ந்து பாருங்கள். இவைகள் எல்லாவற்றையுமே ஆராய்ந்து பாருங்கள். இங்கு காண வந்திருப்பவர்களே, உங்கள் அறைகளுக்குச் சென்றவுடனே இங்கு கூறப்பட்டவைகளை நன்றாக ஆலோசித்துப் பாருங்கள். இதை விவரிக்க வேண்டிய அளவுக்கு விவரிக்க நமக்கு சமயம் போதாது. ஆயினும், நீங்கள் அறைகளுக்குச் சென்ற பிறகு இவையெல்லா வற்றையும் ஒன்றாகப் பிணைத்து அதனை தியானிக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.
125. அவர் தம்மைத்தாமே வெளிப்படுத்தும் விதத்தில் அவரைக் காணத் தவறுகின்றனர்;ஏனெனில் அவர் மிகவும் மகத்தானவர், ஆனாலும் எளியவர்களுக்கு தம்மைத்தாமே வெளிப்படுத்தும் பொருட்டாக அவர் தம்மை எளிமையில் மறைத்துக் கொள்கின்றார். எளிய முறையில் மறைந்திருக்கிறார்,பாருங்கள்? பெரியவைகளில் அவரைக் காண நினையாதீர்கள்.ஏனெனில் அவர் அவைகளைத் தாண்டிச் சென்று விடுகிறார். தேவனுடைய எளிமையைக் கூர்ந்து கவனியுங்கள்.அப்பொழுது தேவனை சரியாக – எளிமையான விதத்தில் இங்கேயே தேவனைக் கண்டுகொள்வீர்கள்.
செய்தி:- தேவன் எளிமையில் மறைந்திருந்து அதன்பின் அவ்விதமே தம்மை வெளிப்படுத்துதல்

Unknown said...

41. அவர்கள் மேசியாவுக்காக ஜெபம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு மேசியா அவசியமாயிருந்தது. ஆனால் காரியம் என்னவெனில், அவர்களுக்கு விருப்பமான வழியில் அவரைப் பெற அவர்கள் விரும்பினர்.தேவன் தமது சொந்த வழியில் அவரை அனுப்பினார்,அவர்களோ அவரைப் புறக்கணித்தனர்.
42. இன்றைக்கும் அவர்கள் அதையே செய்கின்றனர்.அவர்கள் மறுபடியும் அவரைப் புறக்கணிக்கின்றனர்.அன்று அவர்கள் செய்த அதையே இன்று செய்கின்றனர்.ஏன்? அதே காரணம் தான்,அதே காரணம்.அவர் அப்பொழுது வந்தார்,அவர் வந்தாரென்று நாமறிவோம்.அவர் அவர்களிடம் வந்தார்,ஆனால் அவர் எவ்வாறு வரவேண்டுமென்று அவர்கள் விரும்பினார்களோ,அவ்விதமாக அவர் வரவில்லை. இன்றைக்கும் தேவன் ஒன்றை நமக்கு அனுப்பும்போது,அது நமக்கு வேண்டாம்.நமது ஸ்தாபன ருசியை அனுசரித்து அது வருவது கிடையாது.நமது வேதசாஸ்திர கருத்துக்களுடன் பொருந்தும் வண்ணம் அது வருவதில்லை. ஆனால் அதற்காகத்தான் நாம் ஜெபித்து வந்தோம். தேவனுக்கு முன்பாக நாம் ஏறெடுத்த அந்த விண்ணப்பத்துக்கு செவிகொடுத்து தேவன் அதை நமக்கு அனுப்பினார்,நாமோ அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்.
92. தேவன் அவர்கள் மேல் அனுப்பினார்;1963-ல் நம்மேல் அனுப்பினார்.தேவன் துவக்கத்தில் அனுப்பின அதே அபிஷேகத்தை 1963-ல் நம்மேல் அனுப்பினால்,அவர்களைப்போல் நாமும் அதைப் புறக்கணிப்போம்.ஏனெனில் அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியா சபைக்கு வருவாரானால்,அவர் எப்படியிருந்தார் என்று வேதம் கூறுகிறதோ இப்பொழுதும் அப்படியேயிருப்பார்.’’இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்”என்று எபிரேயர் 13:8 உரைக்கின்றது.நாம் ஒரு மேசியாவுக்காக? அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவருக்காக - ஜெபிப்போமானால்,நமக்கு என்ன வேண்டும்? மதசம்பந்தமான அரசியல்வாதியா? நமக்கு இராணுவ மேதையா வேண்டும்? நமக்கு படித்த விஞ்ஞானியா வேண்டும்? உங்களுக்கு ஆட்டுக்குட்டி அவசியம்-தனக்கு மகிமையை எடுத்துக்கொள்ளாமல், உங்களை வார்த்தைக்கு திரும்பக் கொண்டு செல்லும் ஆட்டுக்குட்டி.என்னாவாயினும் உங்களுக்கு சத்தியத்தை எடுத்துரைத்து அதில் நிலை கொண்டிருக்கும் ஒருவர்;ஆனால் அவர்களுக்கோ அது வேண்டாம்.இன்றைக்கு அவர் வருவாரானால்,அவர் முன்பிருந்ததைப்போல் இப்பொழுதும் இருப்பார்;அவர் பிதாவின் வார்த்தையில் அப்படியே நிலைத்திருப்பார்.வேதத்தில் வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு வசனமும் மனுப்புத்திரர்களுக்குள் வெளிப்படுகின்றதா என்று அவர் உறுதி கொள்வார்.அது நிச்சயம்.
94. இன்றைக்கும் அவ்வாறே இருக்கும் மேசியா வருவா ரானால்,அவர் தேவன் வேதத்தில் வக்குத்தத்தம் செய்துள்ளவை களை எடுத்து,அதை மனுப்புத்திரருக்கு முன்பாக வெளிப்படுத்திக் காண்பிப்பார்.ஆனால் ஸ்தாபனங்கள் ஒவ்வொன்றும் அவரைப் புறக்கணிக்கும்.அவர்களுக்கு அது வேண்டாம்.அவர்கள் அதனுடன் எவ்வித தொடர்பு கொள்ளவும் மாட்டார்கள்.ஆனால் அதைத் தான் தேவன் அவர்களிடம் அனுப்புவார். அவர் எதையாவது அவர்களுக்கு அனுப்புவாரானால், அது அதுதான். அவர்கள் அதைக் குற்றப்படுத்தி தங்கள் மீது ஆக்கினையை வருவித்துக் கொள்வார்கள்.அந்த நாளில் யூதர்கள் செய்தது போல,இந்த மானிட வர்க்கமும் அதைச் செய்யும்,ஆம் ஐயா.
அவர் என்ன செய்வார் தெரியுமா? மேசியா 1963-ல் வருவாரானால், அவர் என்ன செய்வார் தெரியுமா? அவர் நாம் பெற்றுள்ள ஒவ்வொரு ஸ்தாபனத்தையும் தகர்த்தெறிவார்.அதை தரைமட்டமாக்கி விடுவார்.
102. எனவே நீங்கள் பிறந்துள்ள தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அளிக்கப்படும்போது,நீங்கள் ஏன் ஸ்தாபனத்துடன் நுகத்தில் பிணைக்கப்படவேண்டும்? தேவனுடைய ராஜ்யத்தில் மாய்மாலக்காரன் ஒருவன் கூட கிடையாது. எல்லோருமே ஆதியாகம த்திலிருந்து வெளிப்படுத்துதல் வரைக்குமுள்ள தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து அதில் நிலைத்திருக்கும் தூய்மையான,கலப்படமற்ற தேவனுடைய குமாரரும் குமாரத்தி களுமாவர். உங்கள் வாழ்க்கை அதை நிரூபிக்கிறது,தேவன் தமது வார்த்தையை அதனுடன் உறுதிப்படுத்தித் தருகிறார்.அதுதான் மேசியா.அதுதான் மேசியாவின் மனைவி.
தேவன் அதில் போதகர்கள் மேய்ப்பர்கள்,தீர்க்கதரிசிகள் போன்றவர்களை வைத்து தமது மேசியாத்துவத்தை நேராக வைத்து,அது எந்த ஸ்தாபனக் கோட்பாடுகளுடனும் கலவாமல் இருக்க,இவைகளைப் பிடுங்கியெறிந்து,சபையை கிறிஸ்துவுக்கும் அவருடைய வார்த்தைக்கும் தூய்மையாகவும் கலப்படமற்றதாகவும் வைக்கிறார்.
செய்தி:- உலகம் விழுந்து போதல். டிசம்பர் 16 -1962.

Unknown said...

116. …இயேசு கிறிஸ்துவின் ஊழியம் இந்த கடைசி நாட்களில் மறுபடியுமாக மாம்சத்தில் அவருடைய சபையில் வெளிப்படுத்தப்படுகிறது. அதைத்தான் நம்மில் அநேகர் விசுவாசிக்கிறோம்.உங்களோடு சேர்ந்து நானும் அவ்வாறே விசுவாசிக்கிறேன்.இதை நான் விசுவாசிக்காவிட்டால், இதைக் குறித்து வேறெதாவதொன்றைச் செய்வேன்.ஏனெனில் இதில் சம்பந்தப்பட்டவன் நானே.தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாசம் செய்தால் நீங்கள் ஜனங்களுக்காக கவலை கொள்பவராயிருப்பீர்கள்.
121. என்னுடைய ஜீவனத்திற்காக நான் பிச்சையெடுக்க நேரிட்டாலும், அல்லது வேறெந்த நிலைமை வந்தாலும், ஜனங்களுக்கு சத்தியத்தை எடுத்துரைப்பதில் நான் தேவனுக்கும் ஜனங்களுக்கும் உத்தமமாக இருப்பேனாக! நான் ஒருபோதும் வஞ்சகனாக இருக்கவேண்டாம்.நான் நேசிக்கிறவர்களை எப்படி வஞ்சிக்க முடியும்? அவர்களுடைய மனதை நான் புண்படுத்த நேரிட்டாலும்,அவர்களை நான் நேசிக்கிறேன்.உங்கள் பிள்ளையை நீங்கள் அடித்து வளர்க்கும் காரணம்,நீங்கள் அவனை நேசிப்பதால்தான்.அவன்மேல் உங்களுக்குப் பிரியம் இல்லை என்பதனால் அல்ல,நீங்கள் அவனை நேசிக்கிறீர்கள் என்பதனால்தான். அவன் தவறாயிருந்து, அவனை நீங்கள் திருத்தாவிட்டால், அவன் கொலை செய்யப்படுவான்.
122. ஊழியமும் அவ்வாறே இருந்து வந்துள்ளது.அன்று இருந்தது போலவே,இன்றும் இருந்தது வருகிறது. அது பிரசங்கிக்கப்பட்டு தேவனுடைய வார்த்தையினால் திட்டவட்டமாக உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.இது தேவனாயிருக்கவேண்டும் என்பதை அது ஊர்ஜிதப்படுத்து கின்றது.அது அப்படித்தான் இருக்க வேண்டும்.
கவனியுங்கள்.இயேசு செய்த அதே ஆவிக்குரிய அடையாளங்கள் இந்தக் கடைசி நாட்களில் பூமியில் மீண்டும் சம்பவித்துள்ளது.எந்த ஆவிக்குரிய அடையாளத்தினால் அவர் தம்மை மேசியாவென்று அடையாளம் காண்பித்தாரோ,அதே ஆவிக்குரிய அடையாளம் இன்றைக்கும் அவரை அடையாளம் காண்பித்துவிட்டது.அவர் இன்னமும் மேசியாவாக இருக்கிறார்.
123.பரி.பவுல் கண்ட அதே அக்கினி ஸ்தம்பம்,இன்றைக்கும் புலப்படக்கூடிய அடையாளமாக பூமியில் தோன்றி,தம்மை யாரென்று காண்பித்துள்ளது-அதே அக்கினி ஸ்தம்பம்.அது அதே தன்மைகளுடன் தோன்றி,அதே கிரியைகளை செய்து கொண்டிருக்கிறது……
214.முன்குறிக்கப்பட்ட சபைக்கு நான் பேசிக்கொண்டிருக்கிறேன். வெளியிலிருப்பவர்களுக்கு அல்ல. இல்லை,ஐயா.ஒவ்வொரு கூட்டத்தா ரிலிருந்தும்,தமது முன்குறிக்கப்பட்டவர்களை அவர் வெளியே இழுத்து விடுகிறார்.அவர்களுக்காகத்தான் அவர் ஒவ்வொரு காலத்திலும் வருகிறார்.
செய்தி:-இப்பொழுது காவலிலுள்ள ஆத்துமாக்கள். நவம்பர் 10,1963.

Unknown said...

45. இப்பொழுதும்,நாம் கடைசி நாட்களிலே,ஒரு தூதன் வருவதற்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். ஏனெனில்,இயேசு அவ்வாறிருக்கும் என்று கூறினார். ஏனெனில் தீர்க்கதரிசிகள் அவ்வாறே இருக்கும் என்று கூறியுள்ளனர்.மல்கியாவும் அவ்வாறே நடக்கும் என்று கூறியுள்ளான். அனைத்து தீர்க்கதரிசிகளும் சாட்சியிட்டுள்ளனர்.இயேசுவானவர், சிலுவையில் அறையப்படு வதற்கு சற்று முன்னர்கூட,தான் மரித்துப் போவதைக் குறித்து கூறியதைவிட,மேலதிகமாக,தம்முடைய இரண்டாம் வருகையைக் குறித்தே பேசினார். இவைகளெல்லாம் சம்பவிக்கத் தொடங்குவதை நாம் காண்கையில்,நாம் வேத வாக்கியங்களை ஆராயப் போவது நமக்கு நலமாயிருக்கும்.ஏனெனில், கள்ளக் கிறிஸ்துக்களும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி,கூடுமானால் தெரிந்துக்கொள்ளப்பட்ட வர்களையும் வஞ்சிக்கதக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் (மத்தேயு 24:24) என்று அவர் கூறினார்.
47. மனுஷகுமாரன் வருவதற்கு சற்று முன்னால் உள்ள நாட்கள் சோதோமின் நாட்களுக்கு ஒப்பாக இருக்கும் என்று இயேசு கூறினார். இவ்வாரத்தில் நாம் ஏற்கனவே பார்த்தது போல,அங்கே மூன்று வகையான மக்களுக்காக, சோதோமுக்கு ஒரு தூதன் வந்தான்;மூன்று தூதர்கள் வந்தார்கள்.ஒரு சாரார்,சோதோமியர்கள், இரண்டாமவர் வெதுவெதுப்பான சபை,மூன்றாவதானவர்கள் வெளியே பிரித்து அழைக்கப்பட்ட சபையாகிய தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். ஆபிரகாமும் அவனது குழுவினரும்,லோத்தும் அவனது குழுவினரும், சோதோமும் அவர்களது குழுவினரும்-இருவர் அங்கே சென்றனர். அச்சுவிசேஷகர் சோதோமுக்குள் சென்றார்; விசுவாசிகளாகிய அம்மக்களை வெளியே கொண்டு வருவதற்காக அங்கே சென்றார்.அவர்களில் சிலரை வெளியே கொண்டு வந்தார்.
48. ஆனால்,தெரிந்துக்கொள்ளப்பட்ட சபையோடு பிந்தி தனித்திருந்த அந்த ஒருவரோ,ஒரு அடையாளத்தைக் காண்பித்தார் என்று நாம் காண்கிறோம்.தேவன் தாமே அதைச் செய்தார்.அது ஒரு புராணக் கதையல்ல.அது ஒரு நிழலான சரீரமல்ல,அப்படிப்பட்ட ஒரு நிழல் சரீரத்தால் புசிக்க இயலாது.அவரோ,கன்றுக்குட்டியின் மாமிசத்தைப் புசித்து வெண்ணையோடு கூடிய அப்பத்தையும் புசித்தார்.பசுவின் பாலையும் குடித்தார்.ஒரு நிழல் சரீரமானது புசிக்காது,குடிக்காது.அது தேவன் மாம்சத்திலே பிரத்தியட்சமான தாகும்.நிச்சயமாக அது அப்படித்தான் இருந்தது.அவர் என்ன பேசிக் கொண்டிருந்தார்?”…அந்த நாளிலே இருந்தது போலவே இருக்கும்…”என்று இயேசு கூறினார். தேவன்,தாம் கிரயத்துக் கொண்டு பரிசுத்தமாக்கிய தம்முடைய ஜனங்களுடைய மாமிசத்துக் குள்ளே,மீண்டும் வருவார்.தமது தெரிந்து கொள்ளப்பட்ட சபைக்கு முன்பு அவர் காண்பித்த அதே அடையாளத்தை இப்பொழுது தமது தெரிந்து கொள்ளப்பட்ட சபைக்கும் காண்பிப்பார்.
49. “அதை விட்டு வெளியே வாருங்கள்” என்ற பிரசங்கம் இல்லை. இது,அது என்பதெல்லாம் ஒன்றுமில்லை அங்கே. ஆபிரகாம் ஏற்கனவே அதைவிட்டு வெளியே தான் இருக்கிறான். ஆனால் ஏனைய தூதர்களோ வெளியே வாருங்கள்,வெளியே வாருங்கள் என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். சபையானது, சபை என்ற வார்த்தைக்கே ”பிரித்தெடுக்கப்பட்டவர்கள்” என்பது பொருளாகும். தேவனுடைய சபையானது ஏற்கனவே பிரித்தெடுக்கப் பட்டதாக இருக்கிறது. அது பிரித்தெடுக்கப்பட்டதாக இருக்கிறது.
50. அவர் அவனுக்கு நான் தான் அவர் என்று கூறும் அடையாளத்தைக் கொடுத்தார்.அவர் அதைச் செய்தபொழுது,தனது முதுகுப் பக்கமாக இருந்த சாராள் நகைத்ததைக் கூறினார்,அதே வல்லமையால் இயேசுவானவர் தம்முடைய வருகையில், சமாரியர்,யூதர் ஆகிய இரு சாராருக்குமே,அதே அடையாளத்தைச் செய்து காண்பித்தார்.இக் கடைசி நாட்களிலே அவர் தம்முடைய தூதனை அனுப்புவார் என்பதாக முன்னுரைக்கப் பட்டுள்ளது. அத்தூதனானவர் இன்றிரவிலே ஒரு மனிதனல்ல.இல்லை ஐயா,அவர் பரிசுத்த ஆவியானவர். அவர் தான் அவருடைய தூதன். அதெப்படியென்றால், தேவன் தம்முடைய வருகைக்கு சற்று முன்னதாக, தம்முடைய சபையிலே அசைவாடி, அற்புதங்களையும் அடையாளங்களையும் காண்பித்துக் கொண்டிருக்கிறார்.
செய்தி:- மரியாளின் விசுவாசம் ஜனவரி 21,1961.

Unknown said...

104. “இந்நாட்களில் பரிசுத்தாவியின் அபிஷேகம் என்று ஒரு காரியமே இல்லை.அது அப்போஸ்தலருக்கு மட்டுமே உரியதாயிருந்தது.அது கடந்து போய்விட்டது.தீர்க்கதரிசிகள் என்ற ஒரு காரியமா?அப்படிபட்ட ஒரு காரியமே அறியப்பட்டதல்ல. அற்புதங்களா?அவைகள் விஞ்ஞானப் பூர்வமானதல்ல.மல்கியா 4ம் அதிகாரமா? அது வேறொரு காலத்திற்குரியது.யோவான்.14:12-ஆ? ஓ, இயேசு உண்மையில் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. லூக்கா 17:30 ஆ? அது ஒரு கட்டுக்கதை.இவை தவறாக வியாக்கியானிக்கப்பட்டுள்ளன.அது மூல வேதாகமத்தில் இல்லை” என்று இவ்வாறெல்லாம் கூறப்படுகிறது. இவ்விதமான அபத்தமான காரியங்களையெல்லாம்,சர்வ வல்லமையுள்ள தேவன் நம் மத்தியில் இறங்கி வரும்பொழுது தவறானவை என்று நிரூபிக்கிறார்.இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று தேவன் கூறும்பொழுது,அது சரியென்று அவர் நிரூபிக்கிறார்.மற்றவர் அதைப்பற்றி கூறாமற் போனால் எனக்கு அக்கறையில்லை;தேவன் தமது சொந்த வார்த்தையை வியாக்கியானிக்கிறவராயிருக்கிறார். இக்கடைசி நாட்களில் இவைகளை செய்வதாக வாக்களித்திருக் கிறார். “…சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும்…” என்று அவர் வாக்களித்தப்படியே தேவனுடைய குமாரனை வெளிப்படுத்து வதற்காக வெளிச்சம் இப்பொழுது இங்கே இருக்கிறது.
105. கிழக்கில் உதிக்கும் அதே சூரியன்தான் மேற்கில் அஸ்தமிக்கிறது. “பகலுமல்ல,அது இரவுமல்ல…(சகரியா.14:7) என்று தீர்க்கதரிசி கூறினார்.சூரியனை மேகங்கள் மறைத்து அதினால் பொழுது மந்தாரமாய் இருக்கிற வேளை அது.” “…சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும்..”என்று கூறப்பட்டுள்ளது.அல்பாவும் ஒமேகாவுமாயிருக்கிற அதே குமாரன்,கிழக்கில் உதித்த அதே குமாரன்தான்.இக்கடைசி நாட்களில்,நாளானது முடியுமுன்னர், மீண்டும் மேற்கில் எழும்பப்போவதாக முன்னுறைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இவ்வசனத்தை எவ்வாறு வியாக்கியானிக்கிறார்களோ எனக்குத் தெரியாது;ஆனால் தேவன் தமது சொந்த வார்த்தையின் வியாக்கியானிக்கிறவராயிருக்கிறார்,அவர் அதை நிரூபிக்கிறார்,இது சாயங்கால வேளையாயிருக்கிறது.
106. வருந்தத்தக்கதான காரியம் என்னவெனில், கிறிஸ்துவின் மணவாட்டி யென்னப்படுகிறவள் மீண்டும் அதற்கு (வஞ்சகத்திற்கு-ஆசி) இரையாகிவிட்டாள்.அவள் உறுதிப்படுத்தப்பட்ட சுத்தமான தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பதற்குப் பதிலாக,ஏதோ,சில வேதக்கல்லூரிப் பிரசங்கியின் மேதாவித்தனமான அறிவை எடுத்துக் கொண்டு,விழுந்து விட்டாள்.
செய்தி:- இப்பொல்லாத காலத்தின் தேவன் ஆகஸ்டு 1, 1965

Unknown said...

57.இப்பொழுது கவனியுங்கள்.நித்திய மகத்துவமான வரும், இயற்க்கைக்கு அப்பாற்பட்ட தேவனுமானவர் முதலில் ஆவியாய் இருந்தார்.மாம்சத்தில் வெளிப்படு வதற்காக, இரண்டாவதாக வார்த்தையென்னும் சரீரமாகிய ஆவிக்குரிய சரீரத்தில் தியோபனி (theophany) தோன்றினார். மெல்கிசேதேக்காக ஆபிரகாமை சந்தித்தபோது இவ்விதமான சரீரத்தில்தான் இருந்தார்.அவர் தியாபனி உருவில் இருந்தார்.கர்த்தருக்கு சித்தமானால் இன்னும் சில நிமிடங்களுக்குள் இதை நிரூபிப்போம்.அவர் வார்த்தையாக இருந்தார்.
58. ‘தியாபனி (theophany) யென்னும் தியாபனி உருவில் சரீரத்தை நீங்கள் பார்க்க முடியாது.அது இப்பொழுது இங்கே இருக்கக்கூடும். ஆயினும் அதை நீங்கள் காணமுடியாது. அது டெலிவிஷனைப் போல இன்னொரு பரிமாணத்தில் (dimension) உள்ளது. ….
160. சோதோமில் இருக்கும் மக்களை நோக்கிப் பாரூங்கள்.அங்கே அவர்களுடைய செய்தியாளர்கள் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஆபிரகமுடைய ராஜரீக வித்து எங்கே இருந்தது? “சோதோம் நாட்களில் நடந்தது போல” என்று சொல்லும் போது அதற்குரிய அடையாளம் என்ன? தேவன் மாம்சத்தில் வந்து தன்னை வெளிப்படுத்தினார். தன்னுடைய முதுகிற்கு பின்னால் இருந்த கூடாரத்திற்குள் இருந்த சாராள் தன்னுடைய இருதயத்தில் நினைத்ததை அவர் பகுத்தறிந்து கூறினார்.புறஜாதியாரின் உலகம் அழிக்கப்படுவதற்கு முன் கொடுக்கப்பட்ட கடைசி அடையாளம் அதுவே.தேவனுடைய கோபத்தினால் புறஜாதியாரின் ஆட்சியிலுள்ள இந்த முழு உலகம் அக்கினியால் அழிக்கப்படுவதற்கு முன் சபையானது அதின் கடைசி அடையாளத்தை பெற்றுவிட்டது.நீ இதை விசுவாசிக்கிறாயா? (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர்-ஆசி)
161. மெல்கிசேதேக்கு தன்னை ஒரு மனுஷ சரீரத்தின் அடையாளமாக வெளிப்படுத்தினான்; அதன் பிறகு அவர் மாம்சமானார், இப்பொழுது, இந்த இரவிலே, அவர் நேற்றும்,இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். நீ இதை விசுவாசிக்கின்றாயா? (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர்-ஆசி).
162. அப்படியென்றால், நேற்றும்,இன்றும்,என்றும் மாறாதவராயிருக்கும் இந்த மெல்கிசேதேக்கு யார்? அவனுக்கு தகப்பனும் கிடையாது,தாயும் கிடையாது; அவனுக்கு நாட்களின் துவக்கம் கிடையாது,நாட்களின் முடிவும் கிடையாது.அவன் ஆபிரகாமை சந்தித்த போது எவ்விதமான அடையாளத்தை செய்தான்? அவர் மாம்சத்தில் வந்தபோது,கடைசி காலத்தில் அச்சம்பவம் மறுபடியும் நடக்கும் என்று கூறினார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நான் அதை விசுவாசிக்கிறேன் ! …..
செய்தி:- யார் இந்த மெல்கிசேதேக்கு ? பிப்ரவரி 21, 1965.

Unknown said...

368. உங்களைச் சற்று புண்படுத்த எண்ணுகிறேன். வேண்டுமென்று நான் அப்படிச் செய்யப்போவதில்லை.பாருங்கள்? நீங்கள் நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டுமென்ற காரணத்தால் தான் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு நான் அங்ஙனம் செய்ய முற்படுகிறேன்.உங்களுக்கு புரிகிறதா? (சபையார் ‘ஆமென்’ என்கின்றர்-ஆசி) கவனியுங்கள் ? ஏன்?.
369. யோவானின் ஊழியத்தில் மனந்திரும்பின சீஷர்கள்தான் இப்பொழுது இயேசுவுடன் கூட நடந்தது “எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்படுத்த வேண்டுமென்று வேதம் ஏன் கூறுகின்றது? போதகர் ஏன் கூறுகின்றனர்” என்று கேட்கின்றனர். அவர்கள் அவனை அறிந்துகொள்ள முடியவில்லை.நான் சொல்வதன் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா? பாருங்கள்? ஒரு சில பேருக்கு மாத்திரமே யோவான் ஸ்நானன்தான் எலியா என்பது வெளிப்படுத்தப்பட்டது.பாருங்கள்? அவர்கள் மாத்திரமே அந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவும் அறிந்து கொள்ளவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
370. “எலியா முதலில் வந்தாயிற்று.நீங்கள் அதை அறியவில்லை என்று இயேசு சொன்னார்.ஆயினும் அவன் செய்யப்போவது என்ன என்று வேதம் கூறிய அனைத்தையும் அவன் செய்து முடித்தான்.நீங்கள் என்னை ஏற்றுக் கொண்டு விசுவாசிக்க,அவன் உங்களைத் திருப்பினான்.அவனுக்கு என்ன செய்யப்படும் என்று வேதம் கூறியதையும் அவர்கள் அவனுக்கு செய்தனர்.அவன் ஏற்கனவே வந்தாயிற்று. நீங்களோ அதை அறியவில்லை,”என்றார்.
371. நீங்கள் ஆயத்தமா? உங்களுக்கு இப்பொழுது சற்று நடுக்கத்தை உண்டாக்க விரும்புகிறேன்.எடுக்கப்படுதலும் அவ்விதமாக சம்பவிக்கும்.அது மற்றவர்கள் அறிந்துகொள்ள முடியாதபடி ஒரு சாதாரண சம்பவமாயிருக்கும். எடுக்கப்படுதல் (rapture) வரப்போகும் ஒரு நாளில் நிகழும்.யாரும் அது சம்பவித்துவிட்டது என்று அறியவே மாட்டார்கள்.இப்பொழுது நீங்கள் எழுந்து போய்விட வேண்டாம்.நான் கூறுவதை ஒரு நிமிடம் ஆலோசனை செய்து பாருங்கள்.நான் இப்பொழுது முடித்துவிடுகிறேன். எடுக்கப்படுதல் ஒரு எளியவிதத்தில் சம்பவித்த பிறகு,நியாயத்தீர்ப்பு ஜனங்களின் மேல் விழும் அப்பொழுது அவர்கள் மனுஷகுமாரனைக் காண்பார்கள்.அவரிடம், ‘எலியா எங்களுக்கு அனுப்பப்பட வேண்டுமா? எடுக்கப்படுதல் சம்பவிக்க வேண்டுமே?” என்று கேட்பார்கள்.
372. அவர் அதற்கு பிரதியுத்தரமாக, ‘அவையெல்லாம் ஏற்கனவே சம்பவித்துவிட்டன, நீங்கள் அதை அறியவில்லை’ என்பார். தேவன் எளிமையில் காணப்படுதல். பாருங்கள்?
செய்தி:- தேவன் எளிமையில் மறைந்திருந்து, அதன்பின் அவ்விதமே தம்மை வெளிப்படுத்துதல் ஞாயிறு காலை, மார்ச்சு 17,1963.

Unknown said...

376. சபையானது ஆயிரக்கணக்கான பேர்களை கொண்டதாயிருக்கும். ஆனால் அவர்கள் இரண்டாவது உயிர்த்தெழுதலின் பிறகுதான் வருவார்கள்.அவர்கள் ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடைவதில்லை. பாருங்கள்?.
377. இந்த நிமிடத்தில் 500 பேர் பூமியை விட்டுச் சென்றால்,உலகத்தினர் அதைக் குறித்து ஒன்றுமே அறிந்து கொள்ளமுடியாது.இயேசு, ‘படுக்கையில் படுத்திருக்கும் இருவரில் ஒருவன் எடுத்துக் கொள்ளப்படுவான்,மற்றவன் கைவிடப்படுவான்’ என்றார்.அது இரவில் நிகழ்கின்றது. ‘வயலில் இருவர் வேலை செய்து கொண்டிருப்பார்கள் (பூமியின் மற்றைய பாகத்தில் அப்பொழுது பகலாயிருக்கும்) ஒருவன் எடுத்துக் கொள்ளப்படுவான். மற்றவன் கைவிடப்படுவான்’ ‘நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் வருகையிலும் நடக்கும்’ (லூக்கா.17:33-36).
379. கல்லறைகள் எவ்வாறு திறக்கப்படும் என்று நினைக்கிறீர்கள்? நான் சொல்ல விரும்பினதைப் பற்றி பேச எனக்கு இப்பொழுது அவகாசமில்லை.என்றாலும் தேவனுடைய எளிமையை வலியுறுத்த ஒரு சில காரியங்களை மாத்திரம் கூறுகிறேன்.பாருங்கள்? நம் சரீரம் கால்ஷியம்,பொட்டாஸியம் இவைகளால் உண்டாக்கப்பட்டுள்ளது. சரீரம் அழியும்போது இவையெல்லாம் சேர்ந்து ஒரு கரண்டியளவுதான் உள்ளது. அது சரி. இது மறுபடியும் உயிர்த்தெழுதலின் ஜீவனைப்பெறுகிறது. தேவன் பேசும் போது உயிர்த்தெழுதல் உண்டாகி,எடுக்கப்படுதல் சம்பவிக்கிறது.ஒரு தேவ தூதன் இறங்கி வந்து,மண் வெட்டியினால் கல்லறைகளிலுள்ள மண்ணை அகற்றி,அதனுள்ளிலிருந்து ஒரு செத்த பிணத்தை எடுப்பான் என்று நாம் நினைப்பதெல்லாம் தவறு.அது என்ன? முதலாவதாக இந்த சரீரம் பாவத்தில் பிறந்தது.உயிர்த்தெழுதலில் அளிக்கப்படுவது அதற்கு ஒப்பான ஒரு புது சரீரம்.பாருங்கள்? இந்த சரீரத்தை நாம் அப்பொழுது பெற்றுக்கொண்டால்,நாம் மறுபடியும் மரிப்போம்.பாருங்கள்? நாம் நினைப்பது போன்று கல்லறைகள் திறக்கப்பட்டு,மரித்தோர் அவைகளினின்று வெளியேறுவதில்லை.அது அவ்விதமாக சம்பவிப்பதில்லை.பாருங்கள்? அது சரி.பாருங்கள்?.
380. அது இரகசியமாக நிகழும்,ஏனெனில் அவர் “இரவில் திருடன் வருகிற விதமாய்” வருவார்.நாம் எடுக்கப்படுதலைக் குறித்து அவர் ஏற்கனவே நமக்குக் கூறிவிட்டார்.
381. எடுக்கப்படுதல் சம்பவித்த பிறகு நியாயத்தீர்ப்பு-பாவம்-வாதைகள்-வியாதிகள் போன்றவை-விழுமென்று அவர் ஏற்கனவே நமக்கு சொல்லியிருக்கிறார். நியாயத்தீர்ப்பின் கோரத்தினின்று தப்பித்துக்கொள்ள ஜனங்கள் மரித்துப்போக ஆசிப்பர். ‘ஆண்டவரே, முதலில் எடுக்கப்படுதல் சம்பவிக்கவேண்டுமே! பின்னை ஏன் இந்த நியாயத்தீர்ப்பு இப்பொழுது எங்கள்மேல் விழ வேண்டும்?’என்று அவர்கள் கூக்குரலிடுவர்.
382. அவர் அதற்கு, ‘எடுக்கப்படுதல் ஏற்கனவே சம்பவித்துவிட்டது.நீங்கள் அதை அறியவில்லை’ என்பார். பாருங்கள்? தேவன் எளிமையில் மறைந்திருக்கிறார். ஓ,என்னே! அது சரி. “அது ஏற்கனவே சம்பவித்துவிட்டது. நீங்கள் அதை அறியவில்லை.”
383. விசுவாசிகள் ஏன் அவருடைய வருகையை அறிவிக்கும் எளிய அடையாளங்களை நம்புவதில்லை?
செய்தி:- தேவன் எளிமையில் மறைந்திருந்து, அதன்பின் அவ்விதமே தம்மை வெளிப்படுத்துதல் ஞாயிறு காலை, மார்ச்சு 17,1963.

Unknown said...

எல்லா நிழல்களும் கடந்து போய்விட்டது என்பது மகத்துவமுள்ளதாய் இருக்கிறதல்லவா? நல்லது நான் உயர்த்தெழுதலில் வருவேன் என்று நம்புகிறேன்.இனி “நம்பிக்கை” என்பதாக அல்ல.அதற்கான உறுதியை உடையவர்களாய் இருக்கிறோம்.அவ்விதமாக “நம்புகிறேன்” என்பதாக அல்ல. ஏனென்றால் நாம் பாவங்கள் நிறைந்த சூழ்நிலையில் இருந்தபோது நம் மத்தியில் உயிர்த்தெழுந்தவராகிய கிறிஸ்து நம்மிடத்தில் வந்தபோது நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்று சம்பவித்து அது எல்லாவித நிழல்களையும் அப்பறப்படுத்திப்போட்டது.
பலிபீடத்தில் அவருடைய சிலுவை மரணத்தில் அவரோடுகூட பழைய காரியங்கள் யாவும் மரித்துப் போய் விட்டது.அவரோடுகூட நாமும் புதியவர்களாய் உயிர்த்தெழுந்து அவரோடு ஜீவித்து அவரோடு அரசாட்சி செய்து உன்னதங்களிலே கிறிஸ்து இயேசுவோடு அமர்ந்திருக்கிறோம்.நாம் ஏற்கனவே அவரோடுகூட உயிர்த்தெழுந்த வர்களாய் இருக்கிறோம்.நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறபடி உயிர்த்தெழுதல் என்பது நடந்தது முடிந்த ஒன்று.ஏனென்றால் நாம் இப்பொழுது கிறிஸ்துவோடுகூட உயிர்த்தெழுந்தவர்களாய் இருக்கிறோம், ஆமென். உன்னதங்களிலே கிறிஸ்துவோடு கூட அமர்ந்திருக்கிறோம். இனி அதைப்பற்றி “அவ்விதமாக” என்பதாக அல்ல.அவை எல்லாம் முடிந்துபோன ஒன்று.ஆமென்.நான் அதை நேசிக்கிறேன் என்பதாக இனி அது இருக்காது. “நினைக்கிறேன்” என்பதாக இனி இருக்காது. “வாழ்த்துகிறேன்” என்பதாக இனி அது இருக்காது, அவ்விதமாக அது இருக்காது. ஓ அது முடிந்துவிட்டது.நாம் அவரோடுகூட உயிர்த்தெழுந்து உன்னதங்களிலே அவரோடுகூட உட்கார்ந்திருக்கிறோம்.
சபைக்கு இப்பொழுதும் உள்ளேயும் இதற்கு மேலேயும் நீங்கள் சொல்லக்கூடும், “சகோதரன் பிரன்ஹாமே இதை எப்படி அர்த்தங்கொள்வது,நாங்கள் சுவிசேஷத்தை பிரசங்கிக்க வேண்டுமா?” அது நம்முடைய அடுத்த நம்பிக்கையாயிருக்கிறது, அது நம்முடைய அடுத்த காரியமாயிருக்கிறது.நமக்கு ஒரு பெரிய கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரோடு உயிர்த்தெழுந்த பிறகு உலகமெங்கும் போய் இந்த நற்செய்தியை மற்றவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
செய்தி:- என் மீட்பர் உயிரோடிருக்கிறார் ஏப்ரல்.10,1955

Unknown said...

124. அபிஷேகம் பண்ணப்பட்டு தேவனை முழுவதுமாக தங்களுக்குள் கொண்டவர்களாய்,அவர்களுடைய ஒவ்வொரு செய்கையும் அசைவும் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக அமைந்திருந்து,அந்த ஷெகினா மகிமையில் நடந்தது கொண்டிருக்கும் ஒரு சபையை எனக்குத் தாருங்கள். அப்பொழுது பூமியின் மேல் ஒரு மேசியா (தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்) நின்று கொண்டிருப்பதை உங்களுக்கு காண்பிப்பேன்.
158. அதற்கு முந்தின நாள்,நான் ஒரு பாறையை எடுத்து ஆகாயத்தில் எறிந்து, “கர்த்தர் உரைக்கிறதாவது,அந்த நேரம் இங்கு வந்து விட்டது. பூமியில் நியாயத்தீர்ப்புகள் தொடங்கும்.மேற்கு கரை முழுவதும் குலுங்கும்” என்றேன்.அது எவ்வளவு பிழையின்றி நிறைவேறினது பாருங்கள்?. நாளுக்கு நாள்,அவர் உரைத்தப்படியே நடந்தது வருகிறது.சகோதரரே, அதை நாம் எப்படி புறக்கணிக்க முடியும்? நம்முடைய விசுவாசத்தை நாம் அவர் பேரில் வைத்திருப்போம்.
159. அவர்கள், “இவர் யார்?” என்று கேட்கின்றனர்.இவர் யாரென்று நமக்குத் தெரியும்.இவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்து,அக்கினி ஸ்தம்பம்.மோசேயின் காலத்தில் அது என்ன செய்ததென்று பாருங்கள்.இன்றைய அக்கினி ஸ்தம்பத்துக்கு அது முன்னடையாளமாயிருந்தது. அது எப்பொழுதுமே….இயேசு கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார் என்று அவர்கள் ஏன் விசுவாசிக்கவில்லை? அவர்கள் தவறாக புரிந்து கொண்டிருந்தனர்.ஏவாள் செய்து போல, அவர்கள் இப்பொழுது செய்கின்றனர்.
208. காலம் மாறிவிட்ட போதிலும் ஜனங்கள் அன்று போல் இன்றும் உள்ளனர்.அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று எபிரேயர் 13:8 உரைக்கிறது.இதைக் கூறி நான் முடிக்கிறேன்: அந்த கேள்வி இனி அவர்களுக்கு கல்ல.அவர்கள்,”இவர் யார்?” என்று கேட்டனர். ஆனால் 1964ல் எழும் கேள்வி, “இவர் யார் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்? ”என்பதே.இதெல்லாம் என்ன? வேதத்தை ஆராய்ந்து பார்ப்பதை நீங்கள் நிறுத்தி விட்டீர்களா? இவர் யார் என்று நீங்கள் நினைக்கின்றனர்? இது மனோதத்துவத்தினால் சிந்தனைகளை அறிவதா? அல்லது வனாந்தரத்திலிருந்து எங்கோ புறப்பட்டு வந்த காட்டுத்தனமான ஒன்றா? யோவான் முன்னோடியாக இங்கு வருவான் என்று முன்னுறைத்த பிறகும், “யோவான் ஒரு காட்டு மனிதன்.அவன் அங்கு ஜனங்களை தண்ணீரில் மூழ்கடிக்கிறான்” என்று அவர்கள் கூறினது போல்.அந்த தீர்க்கதரிசிகள், “அவருக்கு முன்னோடியாக இந்த தீர்க்கதரிசி எழும்புவான்” என்று முன்னுரைத்திருந்தனர். இதோ அவன் வந்தான்.
209. அவர்களோ, “இவன் காட்டு மனிதன்.அவனை விட்டு விலகி நில்லுங்கள்.அவனுடன் எவ்வித தொடர்பும் கொள்ளாதீர்கள்” என்றனர். இதோ மேசியா வேதவாக்கியங்கள் கூறின விதமாகவே வந்தார் – அதாவது அவர் நீநியுள்ளவரும் தாழ்மையுள்ளவரும் கழுதையின் மேல் ஏறி,வேதவசனம் நிறைவேறத்தக்கதாக, நகரத்துக்குள் வருவார் என்று. இதோ ஜனங்கள்,பிலேயாம் மதசம்பந்தமான பண்டிகையில் நின்று கொண்டிருந்தது போல்,மறுபடியும் மதசம்பந்தமான பண்டிகையில் நின்று கொண்டு, “இவர் யார்?” என்று கேட்கின்றனர்.
210.நண்பர்களே, இவ்வேளைக்கென வாக்களிக்கப் பட்டுள்ள வேத வாக்கியங்கள் இன்று ஒவ்வொரு மணி நேரமும் நமது மத்தியில் நிறைவேறி வருகின்றன.இவர் யார் என்று நினைக்கின்றீர்களா?.....
செய்தி:- இவர் யார் என்று சொல்லுகிறீர்கள்? டிசம்பர் 27,1964.

Unknown said...

65. அதற்காக இயேசு அவர்களைக் கடிந்து கொண்டார்.அவர், “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்,அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று உரிமை கோருகீறிர்களே, என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே.நான் உங்களை ஆராயச் சொல்லும் இந்த வேத வாக்கியங்கள்,நான் யாரென்பதை உங்களுக்கு அறிவிக்கும்”என்றார். (யோவான்.5:39).
66.ஆனால் அவர்கள் வார்த்தை கூறினதன் மேல் சாய்ந்திருக்கவில்லை. அவர்கள் தங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்திருந்தனர்.அவர்களுடைய கண்கள் திரையிட்டு மறைக்கப் பட்டிருந்ததாக வேதம் உரைக்கின்றது. அவர்களுடைய வேதசாஸ்திரம் என்னும் திரை அவர்களை குருடாக்கியிருந்தது.
நீங்கள், “சகோ.பிரன்ஹாமே,என்ன கூற முயல்கிறீர்கள்?” எனலாம்.
67. இதை தான் கூற விரும்புகிறேன்.அது மறுபடியும் நடந்தது கொண்டிருக்கிறது.ஆண்களும் பெண்களும், தேவனுடைய வார்த்தை என்ன கூறினபோதிலும்,அவர்கள் சேர்ந்து கொண்ட குறிப்பிட்ட சபையின் மேல் சாய்ந்துள்ளனர்.அவர்கள் அப்படியே தொடந்து சென்று, தங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்து,தேவனுடைய வார்த்தை ஒருக்காலும் எழுதி வைக்கப்படாதது போல் அதை அசட்டை செய்கின்றனர்.அது ஜீவனே இல்லாத விதை.அது மாமிச பிரகாரமான ஜீவனைப் பெற்றுள்ளது.ஆனால் உயிர்ப்பிக்கப்பட ஆவிக்குரிய ஜீவன் அங்கில்லை. அவர்கள் முகத்தின் மேல் திரையிருந்தது.
68. இப்பொழுது கவனியுங்கள்,தேவன் எப்படியிருக்க வேண்டும்,மேசியா எப்படி இருக்க வேண்டுமென்று அவர்கள் தங்கள் சொந்த கருத்தைக் கொண்டிருந்தனர்.ஆனால் மேசியா எப்படி இருக்க வேண்டுமென்று வார்த்தை அறிவித்திருந்தது,இப்பொழுது பாருங்கள்,மேசியா எப்படி இருக்க வேண்டுமென்று தங்கள் சுயபுத்தியில் விளைந்த கருத்தை அவர்கள் உடையவர்களா யிருந்தனர்.பிரதான ஆசாரியன், “எனக்குக் கீழுள்ள ஆசாரியர்களே,மேசியா வரும்போது…நாம் பெரிய தேவாலயத்தை இங்கு கட்டி வைத்திருக்கிறோம்.நாம் இதையெல்லாம் செய்திருக்கிறோம். “அவர் தம்முடைய ஆலயத்துக்கு தீவிரமாய் வருவார்” என்று வேதம் உரைக்கிறது(மல் 3:1).எனவே மேசியா வரும்போது,இந்த ஆலயத்துக்கு வந்து,அவரை நமக்கு அடையாளம் காண்பித்து, “நான் தான் மேசியா.நான் வந்து விட்டேன்.நீங்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த மேசியா நானே என்பார்” என்று சொல்லியிருப்பான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் வந்தபோதோ,அவர்கள் நினைத்திருந்ததைக் காட்டிலும் வித்தியாசமான முறையில் வந்ததால்,அவர்கள் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.அவர் யாரென்று அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. ஆனால் அவருடைய….
69. யாராவது ஒரு மாய்மாலக்காரன் அங்கு நடந்தது சென்று, “நான் தான் மேசியா.நான் டாக்டர் இன்னார் இன்னார்” என்று கூறியிருந்தால், அவர்கள் அவரை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.
70. ஆனால் அவர்கள் சந்தேகமான பிறப்பைக் கொண்ட,எந்த பள்ளியிலும் கல்வி பயிலாத,எந்த வேதசாஸ்திர கல்லூரியிலும் படிக்காத, ஐக்கியச்சீட்டு எதையும் பெற்றிராத ஒரு மனிதனைக் கண்டனர்.ஆனால் அவரோ தேவனுடைய வார்த்தை நிறைவேறுதலாக வந்தார். “நான் செய்கிற கிரியைகள் நான் யாரென்பதை அறிவிக்கும்.நான் செய்வேன் என்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கிரியைகளை நான் செய்யாமல் போனால்,என்னை விசுவாசிக்காதீர்கள்”.
71. அதை இந்நாளுக்கு நாம் பொருத்தலாம் அல்லவா? பரிசுத்த ஆவி வந்திருக்கும் போது,அவர்கள் அதை வேறொரு காலத்துக்குப் பொருத்தப் பார்க்கிறார்கள்.அவர் நித்திய ஜீவனின் வல்லமையைக் கொண்டவராய் கிரியை செய்து கொண்டிருக்கும்போது,அவர்கள் அதை “காட்டுத்தன மான மூடமதாபிமானம்” என்கின்றனர்.ஏன்? அவர்கள் கர்த்தருடைய வார்த்தையின் மேல் சாய்ந்திராமல், தங்கள் சுயபுத்தியின்மேல் சாய்ந்துள்ளனர்.அது உண்மையென்று உங்களுக்குத் தெரியும்.
72. வாக்குத்தத்தம் நிறைவேறுவதே அதற்களிக்கும் வியாக்கியானம். அப்படித்தான் அது அடையாளம் கண்டு கொள்ளப்பட வேண்டும்.
செய்தி:- உன் சுயபுத்தியின் மேல் சாயாதே. ஜனவரி 20,1965.

Unknown said...

36. இன்றைய குருமார்களும் அவ்வாறே உள்ளனர்.நாம் காலத்தை சரிவர நிதானிப்பதில்லை.அன்று போலவே இன்றும் உள்ளது.அதுதான் அந்த நேரம் என்று அவர்கள் சமாதானத்துடன் வாழ்ந்து வந்ததாக எண்ணினர்.எனவே அவர்கள் மேசியாவை எதிர்நோக்கியிருக்கவில்லை. இயேசு தமது வருகையை இரவில் திருடன் வருகிறவிதமாய் இருக்கும் என்றுரைத்தார்.அவருடைய வருகையைக்குறித்து ஜனங்கள் அறியாமலே இருப்பார்கள்.ஆனால் சில கன்னிகைகள் அவரைச் சந்திக்கச் சென்றனர்.அவர்களில் பாதிபேருக்கு தங்கள் தீவட்டிகளில் எண்ணெய் இருந்தது.அவர்கள் ஆயத்தமாயிருந்தனர்.அவர்கள் அந்த அடையாளத்துக்காக விழிப்புடன் நோக்கியிருந்தனர். அவர்களிடம்தான் இன்றிரவு நான் பேசிக் கொண்டிருக்கிறேன் (பாருங்கள்?).அந்த அடையாளத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு,அவருடைய வருகையின் அடையாளத்தை.
37. கர்த்தரால் அளிக்கப்பட்ட இந்த அடையாளங்கள், விசுவாசிகளுக்கே அளிக்கப்படுகிறது. அவிசுவாசிகள் அதை காணவே மாட்டார்கள்.அது அவர்கள் தலைக்கு மேல் சென்று விடுகிறது.அவர்கள் அதைக் காண்பதில்லை.உங்களை இப்பொழுது நான் காண்பது எவ்வளவு உண்மையோ,அவ்வளவு உண்மையாக கர்த்தருடைய தூதன் இன்றிரவு மேடையின் மேல் நின்று கொண்டிருக்கக்கூடும்.நீங்கள் அதைக் காணமுடியும், ஒருக்கால் நான் அதைக் காணாமலிருக்க முடியும் அல்லது நான் அதைக் காணமுடியும். நீங்கள் அதைக் காணாமலிருக்கலாம். அது வேதபூர்வமானது என்று உங்களுக்கு தெரியும்.அது முற்றிலும் உண்மை. அவர்கள் கண்டனர்…பவுல் தரையிலே விழுந்தான் என்று உங்களுக்குத் தெரியும்.ஆனால் அவர்கள்…அவனுடன் கூட இருந்த ஒருவருமே அந்த ஒளியைக் காண முடியவில்லை.
43…..இந்த அடையாளம் விசுவாசியுடன் இணைவதை நீங்கள் காணும் போது,அது முற்றிலும் உண்மையாகின்றது. இதை நான் விசுவாசிக்கு மாத்திரமே கூறிக் கொண்டிருக்கிறேன்.ஏனெனில் அவிசுவாசி இதை ஒருக்காலும் காணமாட்டான்.அவர் இன்று பூமியில் இருப்பாரானால், இந்த அடையாளத்தை கண்டுக்கொள்ளக் கூடாத நமது குருமார்கள் அநேகருக்கு அது எப்படிபட்ட கடிந்து கொள்ளுதலாக அமைந்திருக்கும்! இந்த அடையாளங்களை நாம் தினந்தோறும் இந்த கூடாரத்தில் கண்டு கொண்டு,இவைகளைக் காண்கிறோம்.மற்றவர் இந்த அடையாளத்தை படிக்கின்றனர். சுவற்றில் எழுதப்பட்ட கையெழுத்தைக் காண்கின்றனர். இருப்பினும் அநேகர் அதை அசட்டை செய்து அதைக் காணத் தவறுகின்றனர்.அவர்களுக்கு அது ஒன்றுமேயில்லை. அவர்கள் அதை கவனிப்பதில்லை.
101. நாம் எந்த நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கவனியுங்கள்! அந்த முத்திரைகளைக் கவனியுங்கள்.அது சிதறப்பட்ட தேவனுடைய வார்த்தையை எப்படி கொண்டு வந்தது என்று.இது லூத்தரும் மற்ற மகத்தான சீர்திருத்தக்காரரும் செய்தவைகளை வேதாகமத்தில் எடுத்துக்காட்டி,ஒவ்வொருவரும் என்ன செய்வார்கள் என்றும்,சபைக்கு என்ன நடக்குமென்றும், அவர்கள் கூறாமல் விட்டு விட்டதை எல்லாம் எடுத்துக்கூறினது. இந்த கடைசி நாளில்,அதைக் குறித்து நாம் ஒன்றுமே அறியாதிருந்தபோது,ஒரு குறிப்பிட்ட சம்பவம் நடக்கும் என்று அவர் முன்னறிவித்தார்.செய்தித்தாள்களும் கூட அதை வெளியிட்டன. அவர் இறங்கி வந்து அதை வெளிப்படுத்தி,எல்லா இரகசியங்களையும் ஒன்றாக இணைத்துக் கூறினார் ஆமென்! அது எனக்கு பயபக்தியான ஒன்று! அது என்னைப் பொறுத்தவரையில் வார்த்தையை வரிசைப்படுத்துகிறது… ஜனங்கள் என்ன நினைத்தாலும் கவலையில்லை.ஜனங்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு கவலையுண்டு.அது உண்மை.ஆனால் என்னை பொறுத்தவரையில்,அது வேதாகமத்தின் சத்தியம்.
103. என்னே ஒரு நாள்! நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரம் எப்படிப்பட்டது! இந்த பெரிய தேவரகசியம் முடிந்து விட்டது: தேவதுவத்தை கொண்டு வந்து,அது என்னவென்று காண்பிக்கப்பட்டது. இந்த சிறு தத்துவங்கள் புறப்பட்டு சென்றிருந்தன.ஒருவர் அதுவரை இதுவாக செய்திருந்தார். மற்றொருவர் அவரை அதுவாக செய்திருந்தார். ஆனால் கர்த்தருடைய தூதன் இறங்கி வந்து,அவர்களுடைய தத்துவங்கள் அனைத்தையும் காண்பித்து,அதிலிருந்து உண்மையை வெளியே இழுத்து,அதை நமக்களித்தார்.அது இதோ பிழையற்றதாய் அமைந்துள்ளது,நீங்கள் வேறு எந்த வழியிலும் செல்ல முடியாது.பார்த்தீர்களா,அதுதான் அவர்.பாருங்கள், சர்ப்பத்தின் வித்து- ஜனங்களிடையே இரகசியமாக அமைந்திருந்த வெவ்வேறு காரியங்கள். பாருங்கள்? அது என்? அவர்…இது எதற்கு அடையாளம்?இணைவதற்கு.
செய்தி:- இணையும் நேரமும் அடையாளமும். ஆகஸ்டு 18,1963

Unknown said...

87. இப்பொழுது தீர்மானம் செய்ய வேண்டிய நிலைக்கு அது கொண்டுவரப்பட்டுள்ளது..சபைகளோ அதைப் புறக்கணித்து விட்டன. சபைகள் எதை விரும்பின? வார்த்தையைக் கொலை செய்பவனை; முறைமைகளை ஏற்றுக் கொள்பவனை. முறைமையானது வார்த்தைக்கு முரணாய் இருக்குமானால்,அது வார்த்தையை கொலை செய்யும் ஒன்றாய் உள்ளது.உண்மையான வார்த்தை வெளிப்பட்டு,அது ஜனங்களின் மத்தியில் தேவன் என்று விஞ்ஞானத்தினாலும் புகைப்படங்களினாலும் நிரூபிக்கப் பட்டதை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக அவர்கள் ஸ்தாபன பாரம்பரியங்களை விரும்பினர்.அந்த ஒளி,அதே கர்த்தருடைய தூதன்,அக்கினி ஸ்தம்பம்;
இயேசுகிறிஸ்துவின் சரீரத்தில் பூமியில் வாழ்ந்த அவரே.இந்தக் கடைசி காலத்தில் தமது ஜனங்களின் மேல் வந்துள்ளார். விஞ்ஞானம் அதை புகைப்படம் எடுத்தது.சபையானது அதன் கிரியைகளைக் கண்டது.அது ஒலிநாடாக்களாலும் மற்றவைகளாலும் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு,தனிப்பட்ட முறையில் ஊழியம் செய்துள்ளது.
இவையனைத்துக்கும் பிறகும்,அவர்களுடைய முறைமைகள் சத்தியத்தை புறக்கணித்து,சபைகளின் ஆலோசனை சங்கத்தை விரும்புகின்றன. எல்லாவற்றையும் மூடி,அவைகளை நிறுத்தி, அவைகளை விற்றுப்போடும் ஒரு கொலைபாதகனை அவை விரும்புகின்றன.அது அதை நிச்சயம் செய்யும்.அவர்கள் அவைகளை நிறுத்தி விடுவார்கள்.சபைகளின் ஆலோசனை சங்கம் அப்படி செய்ய வேண்டும்.அதோ மிருகத்தின் முத்திரை! அந்திகிறிஸ்து-கிறிஸ்துவாகிய வார்த்தைக்கு எதிரானது. அவர்களுடையது அல்ல…அவர்கள் நினைக்கின்றனர்.
88. பாரம்பரியங்கள்.அவர்களுடைய பாரம்பரியங்கள் தேவனால் உண்டானதாக அவர்கள் எண்ணுகின்றனர். பாருங்கள்? ஆனால் அது வார்தையின் முன்னால் நிற்க முடியாது.அது சரியென்று தேவன் உறுதிப்படுத்துவதில்லை. இயேசு வார்த்தையுடன் நின்றார்.அவர்களுடைய ஆலோசனை சங்கத்துடன் கூட அல்ல.அவர் வார்த்தையுடன் கூட நின்றார்.அந்த வார்த்தை அவர் தேவன் என்பதை நிரூபித்தது.
அது இன்றைக்கும் அது தேவன் என்பதை நிரூபிக்கிறது.ஏனெனில் அது அதே வாழ்க்கை வாழ்ந்து,அது முன்பு செய்த அதே கிரியைகளையும், அது முன்னுரைத்தவைகளையும் இப்பொழுது நமது மத்தியில் செய்து வருகிறது.
134. தேவனுடைய சரீரம் அவருடைய மணவாட்டியாக ஒன்றிணைந்துள்ளது.அவளும் கிறிஸ்துவும் ஒன்றாக, பரிசுத்த ஆவி இயேசுவின் மாம்சத்தில் கிரியை செய்தது போல,இப்பொழுது சபையின் மாம்சத்தில் கிரியை செய்து கொண்டிருக்கிறது.ஏனெனில் அது அவருடைய சரீரத்தின் ஒரு பாகம்.இருவர் அல்ல,ஒருவரே.அவர்கள் ஒருவரே. கணவனும் மனைவியும் இனி இருவராயிராமல் ஒருவரே. கிறிஸ்துவும் அவருடைய சரீரமும் ஒன்றே.கிறிஸ்துவுக்குள் இருந்த அதே ஆவி இப்பொழுது அவருடைய சரீரமாகிய மணவாட்டிக்குள் இருந்து, அவர்களை எல்லா வார்த்தையுடனும் இணைக்கிறது.தேவன் அங்கு வாசம் செய்து,தம்மை வெளிப்படுத்துகிறார்.
145.…கடைசி காலத்தின் வாக்குத்தத்தங்களை புறக்கணித்து விட்டது. கடைசி கால செய்தி,கடைசி கால அடையாளம்,கடைசி காலத்தில் இருக்க வேண்டிய எல்லாமே,தேவன் முன்னுரைத்த படியே,வார்தைக்கு வார்த்தை அப்படியே நிறைவேறியிருந்த போதிலும்…
இது ஒலி நாடாவில் உள்ளது…. அவர்கள் என்னைச் சுட்டுக் கொன்றாலும்,என்ன செய்தாலும்,அந்த செய்தியை அவர்களால் நிறுத்த முடியாது! பாருங்கள்? அது என்னவானாலும் சென்றுக்கொண்டிருக்கும் பாருங்கள்? அது ஏற்கனவே ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளியே சென்று விட்டது.அது சென்று விட்டது.பாருங்கள்? அவர்களால் ஒரு போதும்… அது இப்பொழுது, முடிவுகாலத்தின் வார்த்தையாக,முற்றிலும் உறுதிப்படுத்தப்பட்டு, மறுபடியும், மறுபடியும், மறுபடியும் அடையாளங் களாலும், இயங்கும் முறையினாலும், இயக்கும் சக்தியினாலும் விஞ்ஞானத் தினாலும்,சபையாலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுவே நேரம் என்பதை தேவனே வார்த்தையினாலும் அடையாளங் களாலும் அற்புதங்களாலும் நிரூபித்திருக் கிறார்.
161. ….உலகம் பூராவும் செல்லப்போகும் இந்த ஒலிநாடாவின் மூலம் லட்சக்கணக்கானவர்களிடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.பாருங்கள்? ஒலி நாடா செல்லும் தேசத்திலுள்ளவர்களே,நீங்கள் எங்கிருந்தாலும், அவர் உங்கள் கரங்களில் இருக்கிறார்.அது உண்மையென்று உங்களுக்கு தெரியும்.தெரியாவிட்டால் நீங்கள் குருடர்களாயிருக்கிறீர்கள்.நீங்கள் வார்த்தையைக் காண முடியாவிட்டால்,வார்த்தையில் தேவனையும் உங்களால் காண முடியாது.அவர் உங்கள் கரங்களில் இருக்கிறார். அவரை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?.
செய்தி:- கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்? நவம்பர் 24,1963.

Unknown said...

288. அந்த நிலையிலுள்ள சபை கடைசி நாளில் இதை அடையாது என்று நமக்குத் தெரியும்.அப்படியானால் அது எப்படி மல்கியா 4ஐ நிறைவேற்றும்? அது எப்படி அதைச் செய்யும்? அப்படிப்பட்ட ஒன்றில் அவர்களுக்கு நம்பிக்கையே கிடையாது.அது எப்படி…லூக்கா 17:30ஐ நிறைவேற்றும்? இந்த கடைசி நாட்களுக்கென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள எல்லா வேதவாக்கியங்களை அது எப்படி நிறைவேற்றும்? அதனால் செய்ய முடியாது,ஏனெனில் அது அதை மறுதலிக்கிறது! “லோத்தின் நாட்களில் நடந்ததுபோல,மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.”
289. சோதோம் அன்றிருந்த நிலையைப் பாருங்கள், இன்று சபை உள்ள நிலையைப் பாருங்கள். தெரிந்துக்கொள்ளப்பட்ட ஆபிரகாமுக்கு என்ன நடந்ததென்று பாருங்கள்.
290. லோத்துக்கும் சோதோமிலிருந்த மற்றவர்களுக்கும் அங்கு என்ன சம்பவித்ததென்று பாருங்கள்.பில்லி கிரகாமுக்கும்,ஓரல் ராபர்ட்ஸும் அந்த ஸ்தாபனங்களிடையே உள்ளதைப் பாருங்கள்,வெளியே இழுக்கப்பட்ட ஆபிரகாமின் சபையை பாருங்கள்.
291. மாம்சத்தில் தோன்றிய தேவனாகிய இயேசு தாமே அங்கு மாம்ச சரீரத்தில் நின்றுகொண்டு,என்ன விதமான அடையாளத்தை அளித்தார் என்று பாருங்கள்.நீங்கள், “அது தூதன்” எனலாம்.வேதம் அவர் தேவன் என்றுரைக்கிறது.
292. கர்த்தராகிய தேவன்,ஏலோகிம் மாம்ச சரீரத்தில் நின்றுகொண்டு, அவர் கடைசி நாட்களில் தம்முடைய சபையை அதிகமாக அபிஷேகிப்பார் என்று காண்பித்தார்.அது தேவன் மறுபடியுமாக மானிட சரீரத்தில் கிரியை நடப்பிப்பதேயாகும். “சோதோமின் நாட்களில் நடந்தது போல,மனுஷகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும்.” அதே விதமான காரியம்.அதை நீங்கள் வேத வசனங்களில் காணலாம். “வேதவாக்கியங்களைப் படித்து அவைகளை ஆராய்ந்து பாருங்கள். அவைகளால் நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே,” இதைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே.பாருங்கள்?பாருங்கள்?
297. “நீ எங்களுக்கு போதிக்கிறாயா? நீ வேசித்தனத்தில் பிறந்தவன்.” ஓ, தேவனே!.
298. அதே காரியம் மறுபடியும் சம்பவிக்கிறதை பார்த்தீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்) அது மறுபடியும் சம்பவிக்கிறதை பார்த்தீர்களா? இவையெல்லாம் அவர்களுடைய மதசம்பந்தமான விஞ்ஞானத்தில் அடங்கியுள்ளன……
செய்தி:- கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக்கூடாத இணைப்பு. நவம்பர் 25, 1965.

Unknown said...

தங்களுக்கு அறிந்த நபர்கள் யாருக்காவது இதுவரையில் நமது தீர்க்கதரிசி.சகோ.வில்லியம் மரியன் பிரன்ஹாம் அவர்கள் மூலம் தேவனால் அளிக்கப்பட்ட செய்திகளின் (தமிழ்,ஆங்கிலம், தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி) ஒலிநாடாக்கள் கிடைக்க பெறாமலிருந்தால் எங்களுக்கு தாங்கள் யாவரும் மின்னஞ்சல் மூலம் அவர்களது முகவரி மற்றும் தொலைபேசி எண்களுடன் அனுப்பி தாருங்கள். நாங்கள் அவர்களுக்கு இலவசமாக அனுப்பி தருகிறோம்.

email : jayam14051980@gmail.com
contact no:- +919884595250.

Victor said...

Please send me Brenham prophet's book in Tamil. I am a reformed Christian following Brenham prophet's messages for the past 5 years.I read many messages of 7th Prophet. Pl send me books (Tamil) to my following personal address.

I tried with Brenham good news society, kodambakkam, chennai for books, but its no more, the land line is also not functioning.

My address

J. Victor John Jeyaseelan,
Door no : Old 70/ New 14,
West Ponnagaram, 6th Street, Madurai 625016.
Cell no 9944432284

I m residing at at Madurai, near Arapalayam bus stand.

Thank u jeyam sir,
God bless ur ministery.

Unknown said...

👍