இயேசுவைப் போலவே மாற ஓர் அருமையான வழிகாட்டல். பிரன்ஹாம் வழங்கியது.
* உன்னத அழைப்பு * (சகோதரர்.பிரன்ஹாம் சகோதரர்.எர்னஸ்ட்ஃபான்ட்லரிடம் உரைத்து,சகோதரர்.ராபர்ட்காஃப் வெளியிட்டது.) தேவன் உங்கள் ஆவி அனைத்திலும், நீங்கள் உண்மையில் இயேசுவைப் போலிருக்க உங்களை அழைத்திருப்பாரானால், அவர் உங்களை சிலுவயிலரையுண்ட தாழ்மையுள்ள வாழ்க்கைக்கு இழுத்து, உங்களிடம் கீழ்படிதலை அதிகாரத்துடன் கேட்டு, மற்ற கிறிஸ்தவர்களை நீங்கள் பின்பற்ற அனுமதிக்க மாட்டார். மற்ற நல்லவர்கள் காரியங்களைச் செய்ய அநேக முறை அவர் அனுமதிப்பதாகக் காணப்படும், ஆனால் அவைகளை நீங்கள் செய்ய அவர் அனுமதிக்கமாட்டார் பயபக்தியாயும் உபயோகமுள்ளவர்களாயும் காணப்படும் மற்ற கிறிஸ்தவர்களும் ஊழியகாரர்களும் தங்களை முன்னால் உந்திக்கொண்டும், செல்வாக்கை பயன்படித்திக் கொண்டும் தங்கள் திட்டங்களை நிறைவேற்ற திட்டமிடவும் கூடும் ஆனால் உங்களால் அப்படி செய்யமுடியாது. நீங்கள் செய்யமுயன்றால் தோல்வி கண்டு கர்த்தரால் கடிந்துக்கொள்ளப் பட்டு, அதற்காக மிகவும் மனஸ்தாபப்பட வேண்டிய நிலைமை ஏற்படும். மற்றவர்கள் தங்களைக் குறித்தும், தங்கள் வேலையைக் குறித்தும் தங்கள் வெற்றியைக் குறித்தும் தாங்கள் எழுதின புத்தகங்களைக் குறித்தும் பெருமையடித்துக் கொள்ள கூடும். ஆனால் பரிசுத்த ஆவியானவர்,அப்படிபட்ட எதையும் செய்ய உங்களை அனுமதிக்கமாட்டார்.அவ்வாறு நீங்கள் செய்யத் தொடங்கினால் அவர் ஒரு ஆழமான இழிவுக்கு நடத்தி, உங்கள் நல்ல கிரியைகளையும் உங்களையும் நீங்களே நிந்திக்கும்படி செய்துவிடுவார் மற்றவர்கள் அதிக பணம் சம்பாதிக்கவும், அல்லது பரம்பரை சொத்தைப் பெறவும் டாம்பீகமாக வாழவும் அனுமதிக்கப் படுவார்கள். ஆனால் தேவன் அன்றாடகம் உங்கள் தேவைகளை அளிப்பார். ஏனெனில் பொன்னைக் காட்டிலும் மேலான ஒன்றை நீங்கள் பெற வேண்டுமென்று அவர் விரும்புகிறார் அது தான் எவ்வித உதவியுமற்றவர்களாய் அவர் பேரில் முழுவதுமாக சார்ந்திருத்தல். காணக் கூடாத பொக்கிஷத்திலிருந்து ஒவ்வொரு நாளும் உங்கள் தேவைகளை அளிக்கும் சிலாக்கியத்தை அவர் பெற விரும்புகிறார் மற்றவர்கள் முன்னேறவும் கனம் பெறவும், கர்த்தர் அனுமதித்து, உங்களை அவர் மறைவில் வைக்கக்கூடும். அவருடைய வருகையின் மகிமைக்கு அவர் சில தெரிந்துக் கொள்ளப்பட்ட நறுமணம் கமழும் கனிகளை தோன்றச் செய்ய விரும்புகிறார். அத்தகைய கனிகள் நிழலில் மாத்திரமே தோன்றும். மற்றவர்கள் பெரியவர்களாக ஆக தேவன் அனுமதிப்பார், ஆனால் உங்களையோ தாழ்ந்தவர்களாகவே வைத்திருப்பார். மற்றவர்கள் அவருக்கு ஒரு பணி செய்து, அதற்கான நன் மதிப்பைப் பெற அவர் அனுமதிப்பார். ஆனால் நீங்களோ அவருக்காக உழைத்து பாடுபடும்படி செய்து, நீங்கள் எவ்வளவு அவருக்காக செய்திருக்கிறீர்கள் என்பதையும் கூட நீங்கள் அறியாம லிருக்கும் படி செய்து விடுவார். உங்கள் உழைப்பை இன்னும் அதிக விலை யுயர்ந்தாகச் செய்ய, நீங்கள் செய்த வேலைக்கு மற்றவர்கள் நன் மதிப்பைப் பெறும்படி செய்வார். இயேசு வரும் போது அது உங்களுக்கு கிடைக்க விருக்கும் பலனை பத்து மடங்கு அதிகரிக்கும். பரிசுத்த ஆவியானவர் அக்கறையான அன்புடன், விழிப்புடன் பாதுகாத்து, நீங்கள் கூறும் சிறு சொற்களையும், உங்கள் உணர்ச்சிகளையும், நேரத்தை வீணாக்குவதைக் குறித்தும் உங்களை கடிந்துக் கொள்வார். இவைகளைக் குறித்து மற்ற கிறிஸ்தவர்கள் கவலைப் படுவதேயில்லை. எனவே தேவன் முடிவற்ற ராஜா என்றும், தமக்கு சொந்தமானவர்களுக்கு அவரது விருப்பப்படி செய்ய அவருக்கு அதிகாரம் உண்டென்றும், அவர் உங்களிடம் ஈடுபடும் விஷயத்தில், உங்களுக்குப் புதிராகக் காணப்படும் ஆயிரம் காரியங்களுக்கு அவர் விளக்கம் கூற வேண்டிய அவசியமில்லை என்றும் உங்கள் மனதில் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். தேவன் உங்கள் வார்த்தையை ஏற்றுக் கொள்வார். நீங்கள் மாத்திரம் உங்களை அவருடைய அடிமையாக விற்றுப் போட்டால், அவர் உங்களை அக்கறையுள்ள அன்பினால் சுருட்டி, மற்றவர்கள் சொல்வதையும் செய்வதையும் நீங்கள் சொல்லாமலும் செய்யாமலும் இருக்கப் பண்ணுவார். இதை ஒரேயடியாக தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதாவது நீங்கள் நேரடியாக பரிசுத்த ஆவியுடன் ஈடுபட வேண்டுமென்றும், உங்கள் நாவைக் கட்டவும், உங்கள் கைகளுக்கு சங்கிலியிடவும், உங்கள் கண்களை மூடவும் மற்றவர்களுக்கு அவர் செய்யாத அநேக காரியங்களை உங்களுக்கு செய்யவும் அவருக்கு பிரத்தியேக அதிகாரம் உண்டென்றும் அறிந்து கொள்ளுங்கள். இவ்விதம் நீங்கள் ஜீவனுள்ள தேவனால் ஆட்கொள்ளப் பட்டு இந்த பிரத்தியேக, தனிப் பட்ட, அந்தரங்க அக்கறை கொண்ட பாதுகாப்பின் பேரில் உங்கள் இருதயத்தின் மறைவில் நீங்கள் திருப்தியும் மகிழ்ச்சியும் கொண்டிருப்பீர்களானால் நீங்கள் பரலோகத்தின் வாசலைக் கண்டுக் கொண்டீர்கள் pl click to read it in ENGLISH
2 comments:
Amen.GOOD MESSAGE
God bless you brother
Post a Comment